உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருட்டு போனால் ? இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்...

மூன்றே நாட்களில் உங்கள் வங்கிக் கிளையில் நீங்கள் புகார் அளிக்க வேண்டும்

Debit Card Frauds :  உங்களின் ஏ.டி.எம் பின்களை ஹேக் செய்து அடிக்கடி உங்களது அகௌண்ட்டில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பது தற்போது ஹேக்கர்களுக்கு வாடிக்கையான ஒன்றாக மாறிவிடுகிறது. உங்களின் ஏ.டி.எம். கார்ட்கள் தொலையும் போது, ஏ.டி.எம்.மில் நீங்கள் பணம் எடுக்கும் போது என உங்களின் பின் நம்பரை ஹேக் செய்வதற்கான வாய்ப்புகள் ஆங்காங்கே ஏரளமாக அமைந்துவிடுகிறது.

 Debit Card Frauds: How to Get Money Back from ATM card Frauds

இதனை தடுப்படுத்திற்கு புதிய வழிமுறைகளை உருவாக்கியுள்ளது ஆர்.பி.ஐ. உங்களின் பணம் திருடு போய் இருப்பதை நீங்கள் புகாராக அளித்தால் உங்களின் பணத்தை உங்களின் வங்கிகளே மீட்டு உங்களின் அக்கௌண்ட்டில் சேர்த்துவிடும். புகாரை மிக விரைவாக தந்தால் மட்டும் தான் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இல்லாவிட்டால் உங்களின் பணம் போனது போனது தான்.

புகார்களை அளிப்பதற்கு 24*7 சேவை மையங்கள், இணைய தளம், போன் பேங்கிங், எஸ்.எம்.எஸ், ஈ-மெயில், ஐவிஆர் , வங்கிக் கிளை என அனைத்து வசதிகளையும் வங்கிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

பண பரிவர்த்தனை நடந்த உடனே உங்களுக்கு எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் அனுப்பவது வங்கிகளின் வழக்கம். ஒரு வேளை நீங்கள் அந்த பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ளவில்லை என்றால், நீங்கள் நேரடியாக புகார் அளிப்பதற்கு அந்த மெசேஜ்களிலே இணைப்புகள் இருக்கும் நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்களின் பணம் திருட்டுத் தனமாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்த மூன்றே நாட்களில் உங்கள் வங்கிக் கிளையில் நீங்கள் புகார் அளிக்க வேண்டும். அதற்கு மேலான நாட்களை நீங்கள் எடுத்துக் கொண்டால், இழந்த பணத்தை மீட்பது கடினம்.

பணப்பர்வர்த்தனை நடைபெற்று மூன்று நாட்களுக்குள் நீங்கள் புகார் அளிக்காமல் மெதுவாக புகார் அளித்தால் , சேவிங்க்ஸ் அக்கௌண்ட் கணக்கில் எடுக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கு கட்டணமாக 5000 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும். இதர சேவிங்க்ஸ் பேங்க் அக்கௌண்ட்களில் இந்த திருட்டு நடைபெற்றிருந்தால் 10,000 வரை இழப்புகள் ஏற்படும்.

5 லட்சம் வரையில் உள்ள கரண்ட், கேஷ், மற்றும் க்ரெடிட் அக்கௌண்ட்களில் ஏற்படும் திருட்டில் இருந்து பணத்தை மீட்க 25,000 ரூபாய் வரை நீங்கள் பணம் செலுத்த நேரிடும். 4-7 நாட்களுக்குள் நீங்கள் புகார் அளித்திருந்தால் 90 நாட்களில் உங்களிடம் இருந்து பெறப்பட்ட தொகை உங்களில் அக்கௌண்ட்டில் செலுத்தப்பட்டுவிடும். ஆர்.பி.ஐயின் அறிவிப்புப்படி இந்த நடைமுறைகள் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Business news in Tamil.

×Close
×Close