இன்றைய நவீன உலகில், நிதிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் விரல் நுனியில் நடக்கின்றன. இந்த வேகமான மாற்றத்தில், உங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் தேவைகளுக்குப் பொருத்தமான டெபிட் கார்டு வைத்திருப்பது மிகவும் அவசியம். பாதுகாப்பான பரிவர்த்தனைகள், சிறப்புச் சலுகைகள், மற்றும் கூடுதல் பலன்கள் எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய இந்தியாவின் 5 சிறந்த டெபிட் கார்டுகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. ICICI Bank Coral Paywave International Debit Card [ஆண்டு கட்டணம்: ரூ.599 + ஜிஎஸ்டி]
என்எஃப்சி (NFC) தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான விசா பேவேவ் டெபிட் கார்டு ஆகும். காண்டாக்ட்லெஸ் (Contactless) வசதியுடன் கூடிய இந்தியாவில் அறிமுகமான முதல் கார்டுகளில் இதுவும் ஒன்று. ஆன்லைன் ஷாப்பிங், சர்வதேசப் பரிவர்த்தனைகள் மற்றும் பயணங்களுக்கு இது மிகவும் ஏற்றது. திரைப்பட டிக்கெட்டுகளில் இலவச சலுகைகள், ஏர்போர்ட் லவுஞ்ச் (Lounge) அணுகல் ஆண்டுக்கு 2 முறை இலவசம், உள்நாட்டு ஏடிஎம்களில் ரூ.1 லட்சம் வரையிலும், சர்வதேச ஏடிஎம்களில் ரூ.2 லட்சம் வரையிலும் பணம் எடுக்கும் வசதி, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு அதிக வரம்பு, அடிக்கடி பயணிக்க விரும்புபவர்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு இந்த கார்டு சிறந்த தேர்வு எனலாம்.
2. HDFC Bank RuPay Premium Debit Card [ஆண்டு கட்டணம்: ரூ.200 + ஜிஎஸ்டி]
ரூபே (RuPay) நெட்வொர்க்கில் இயங்கும் இந்த கார்டு, இந்திய இணையதளங்களில் ஆன்லைன் வாங்குதல்களுக்கு மிக சிறந்தது. பேபால் (PayPal) மூலம் சர்வதேச இ-காமர்ஸ் தளங்களிலும் இதை பயன்படுத்தலாம்.பல்வேறு இ-காமர்ஸ் தளங்களில் தள்ளுபடி சலுகைகள், Utility bills 5% கேஷ் பேக், ரயில் டிக்கெட் முன்பதிவுகளுக்கு கேஷ்பேக் சலுகை, ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல் ஆண்டுக்கு 2 முறை இலவசம், குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் மற்றும் அதிக ஷாப்பிங் வரம்பு இந்த கார்டின் கூடுதல் பலன்கள்.
3. Kotak PayShopMore International Chip Debit Card [ஆண்டு கட்டணம்: ரூ.750 + ஜிஎஸ்டி]
விசா நெட்வொர்க்கில் இயங்கும் இந்தக் கோடக் டெபிட் கார்டு, பல்வேறு ஆன்லைன் சலுகைகளுடன் சர்வதேசப் பரிவர்த்தனைகள் மற்றும் பணம் எடுக்கும் வசதியும் வழங்குகிறது. காணாமல்போன கார்டுக்கு ரூ.2.50 லட்சம் வரையிலும், ஆன்லைன் மோசடிக்கு ரூ.50,000 வரையிலும் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல், உங்களுடைய கார்டின் வடிவமைப்பைத் தேர்வு செய்யும் வசதி கிடைக்கிறது.
4. Axis Bank Burgundy Debit Card [ஆண்டு கட்டணம்: ரூ.3,000 + ஜிஎஸ்டி]
மாஸ்டர்கார்டு (Mastercard) நெட்வொர்க்கில் இயங்கும் இந்த கார்டு, இந்தியாவில் அதிக பணம் எடுக்கும் வரம்பைக் கொண்டது. இந்த பிரீமியம் கார்டை வைத்திருக்க, வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ₹10 லட்சம் இருப்பு பராமரிக்க வேண்டும். தினசரி ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு ரூ.3 லட்சம். ஆன்லைன் பரிவர்த்தனை வரம்பு ரூ.6 லட்சம். விஐபி (VIP) வசதிகளுடன் ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல். கார்டு தொலைந்தால் ரூ.6 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படுகிறது.
5. SBI Platinum International Debit Card [ஆண்டு கட்டணம்: ரூ.175 + ஜிஎஸ்டி]
குறைந்த ஆண்டு கட்டணத்தில் சர்வதேசப் பரிவர்த்தனை வசதியுடன் கூடிய எஸ்பிஐ-யின் சிறந்த கார்டுகளில் இதுவும் ஒன்று. விசா மற்றும் மாஸ்டர்கார்டு என இரண்டு நெட்வொர்க்குகளிலும் இந்தக் கார்டு கிடைக்கிறது. அதிக பணம் எடுக்கும் வரம்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு டெபிட் கார்டு இஎம்ஐ (EMI) வசதி, ஏர்போர்ட் லவுஞ்ச் அணுகல், ஆன்லைன் ஷாப்பிங்கில் ரிவார்ட் பாயிண்ட்ஸ் போன்றவை கிடைக்கின்றன.
உங்கள் தனிப்பட்ட தேவைகள், செலவினப் பழக்கங்கள் மற்றும் வங்கிச் சலுகைகளுக்கு ஏற்ப இந்த டெபிட் கார்டுகளில் ஒன்றைத் தேர்வு செய்வதன் மூலம், உங்களுடைய நிதிப் பயணத்தை பாதுகாப்பாகவும், லாபகரமாகவும் மாற்றிக்கொள்ளலாம்.