சரியும் டெபிட் கார்டுகள், காரணம் என்ன?

சரிவுக்கு காரணமாக, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பலர் வேறு இடங்களுக்கு மாற்றலாகியும், அதன் வங்கி கணக்கு முகவரியை மாற்றாமல் இருப்பது,

By: Published: July 18, 2019, 2:35:09 PM

நடப்பாண்டு 2019-ம் மார்ச் – மே மாதங்களில் 10 சதவீதம் அதாவது 10 கோடி டெபிட் கார்டுகள் குறைந்துள்ளதாக ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

இந்தியாவில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 92.4 கோடி டெபிட் கார்டுகள்மா புழக்கத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. வங்கி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு, மேக்னட்டிக்
ஸ்ட்ரைப் கார்டுகளை மாற்றி, சிப் கார்டுகளை விநியோகித்து வருகிறன. இதனால் மார்ச் – மே மாதங்களில் 92.4 கோடியாக இருந்த டெபிட் கார்டுகள் 82.4 கோடியாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

டெபிட் கார்டுகள் குறைந்துள்ள அதே கால கட்டத்தில் கிரெடிட் கார்டுகளின் புழக்கம் 10 லட்சத்திலிருந்து 5 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, மே மாதம் மட்டும் 3.86
கோடியாக இருந்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 4.89 கோடியாக அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக எச்டிப்சி வங்கி 1.26 கிரெடிட் கார்டுகளையும், எஸ்பிஐ 87 லட்சம் கிரெடிட்
கார்டுகளையும், ஆக்சிஸ் வங்கி 62 லட்சம் கிரெடிட் கார்டுகளையும் மே மாதம் வழங்கியுள்ளன என்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

இந்நிலையில், டெபிட் கார்டுகளை பொறுத்தவரையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி 5.2 கோடி கார்டுகளையும், பாங்க் ஆஃப் இந்தியா 2.2 கார்டுகளையும், எஸ்பிஐ 1.9 கோடி கார்டுகளையும் மே மாதம் இழந்துள்ளன. இந்த சரிவுக்கு காரணமாக, டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பலர் வேறு இடங்களுக்கு மாற்றலாகியும், அதன் வங்கி கணக்கு முகவரியை மாற்றாமல் இருப்பது, புதிய சிப் கார்டை பெற்ற பிறகும் அதை ஆக்டிவேட் செய்யாமல் இருப்பதுதான் என்று கூறப்படுகிறது.
மேலும் கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்வது 3 சதவீதமும் டெபிட் கார்டு ஸ்வைப் செய்வது 0.04 சதவீதமும் மே மாதம் அதிகரித்துள்ளது.

அதே கால கட்டத்தில் பிஓஎஸ் இயந்திரத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்தவர்கள் 61,300 கோடி ரூபாயும், ஏடிஎம் பரிவத்தனைகள் 400 கோடி ரூபாயும் செய்துள்ளனர். இந்நிலையில், மார்ச் மாதம் 89 கோடி முறை டெபிட் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் பரிவர்த்தனைகள் நடைபெற்று இருந்தது. ஏப்ரல் மாதம் அது 81 கோடி முறையாகச் சரிந்து இருந்தது. ஆனால் மே மாதம் அது மீண்டும் 82 கோடி முறையாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Business News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Debit cards debit card rules and regulations

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X