RBI Bank Holidays List for December 2024: ரிசர்வ் வங்கி ஆண்டு இறுதி மாதமான டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்பட மொத்தம் 17 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
இந்த ஆண்டின் கடைசி மாதத்தில் மொத்தம் இரண்டு சனிக்கிழமைகள் மற்றும் ஐந்து ஞாயிறுகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
RBI Bank Holidays List for December 2024: வங்கிகள் மூடப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் வங்கிச் சேவைகளை ஆன்லைனில் தொடர்ந்து பெறலாம். வார விடுமுறை உள்பட டிசம்பர் மாதம் மொத்தம் 17 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டிசம்பர் 1 - ஞாயிறு (இந்தியா முழுவதும்)
டிசம்பர் 3 - வெள்ளி - புனித ஜான் பாப்டிஸ்ட் பண்டிகை. பிரான்சிஸ் சேவியர் (கோவா)
டிசம்பர் 8 - ஞாயிறு
டிசம்பர் 12 - செவ்வாய் - டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)
டிசம்பர் 14 - இரண்டாவது சனிக்கிழமை
டிசம்பர் 15 - ஞாயிறு
டிசம்பர் 18 - புதன் - U SoSo Tham (மேகாலயா) இறந்த நாள்
டிசம்பர் 19 - வியாழன் - கோவா விடுதலை நாள் (கோவா)
டிசம்பர் 22 - ஞாயிறு
டிசம்பர் 24 - செவ்வாய் - கிறிஸ்துமஸ் ஈவ் (மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா)
டிசம்பர் 25 - புதன் - கிறிஸ்துமஸ்
டிசம்பர் 26 - வியாழன் - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா)
டிசம்பர் 27 - வெள்ளி - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் (மிசோரம், நாகாலாந்து மற்றும் மேகாலயா)
டிசம்பர் 28 - நான்காவது சனிக்கிழமை
டிசம்பர் 29 - ஞாயிறு
டிசம்பர் 30 - திங்கள் - மேகாலயாவின் பெஸ்ட்
டிசம்பர் 31- செவ்வாய் - புத்தாண்டு ஈவ் (மிசோரம், சிக்கிம்)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“