ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் தற்போது பலராலும் விரும்பபபட்டு வருகிறது. இடர்பாடுகள் குறைவு என்பதால் இதில் முதலீடு செய்ய அனைத்து தரப்பு முதலீட்டாளர்களும் விரும்புகின்றனர்.
இதில் சாதாரண முதலீட்டாளர்களை விட மூத்தக் குடிமக்களுக்கு 0.50 அடிப்படை புள்ளிகள் அதிகம் வட்டி விகிதம் வழங்கப்படுகின்றன.
எஸ்பிஐ சூப்பர்ஹிட் எஃப்டி திட்டம்
எஸ்பிஐயின் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, மூத்த குடிமக்கள் எஸ்பிஐயின் எஃப்டி திட்டத்தில் பல்வேறு தவணைகளில் முதலீடு செய்யலாம்.
பொதுவாக, வயது அதிகரிக்கும் போது, முதலீடு தொடர்பாக ரிஸ்க் எடுக்கும் திறன் குறைந்து விடுகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாத வருமானத்திற்காக பல வங்கி டெபாசிட்டுகளும் அரசாங்க திட்டங்களும் உள்ளன.
இவற்றில் ஒன்றுதான் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) மூத்த குடிமக்கள் கால வைப்புத் திட்டம் (சீனியர் சிட்டிசன் டெர்ம் டெப்பாசிட் ஸ்கீம்).
எஸ்பிஐ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, மூத்த குடிமக்கள் எஸ்பிஐயின் எஃப்டி திட்டத்தில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களில் டெபாசிட் செய்யலாம்.
மூத்த குடிமக்கள் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு 1% கூடுதல் வட்டியைப் பெறுகிறார்கள்.
₹10 லட்சம் 10 ஆண்டுகளில் ₹21 லட்சமாக உயரும்
ஒரு மூத்த குடிமகன் எஸ்பிஐயின் 10 வருட முதிர்வு திட்டத்தில் 10 லட்சத்தை மொத்தமாக டெபாசிட் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.
எஸ்பிஐ எஃப்டி கணக்கின்படி, முதலீட்டாளர் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தில் மொத்தம் ரூ.21,02,349ஐ முதிர்வு காலத்தில் பெறுவார்.
இதில், வட்டி மூலம் ரூ.11,02,349 நிலையான வருமானம் கிடைக்கும். எஸ்பிஐ 2023 டிசம்பர் 27ல் இருந்து ரூ. 2 கோடிக்கும் குறைந்த டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது.
வட்டிக்கு வருமான வரி
வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட்/டெர்ம் டெப்பாசிட்கள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ரிஸ்க் எடுக்காத முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த வழி ஆகும்.
இதில், 5 வருட வரி சேமிப்பு FDக்கு 80C பிரிவின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இருப்பினும், ஃபிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, வரி விலக்கிலிருந்து விலக்கு பெற வைப்பாளர் படிவம் 15G/15H ஐ சமர்ப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“