ஒருவர், பணம் சம்பாதிக்க விரும்பினால், முதலீடு அவசியம். பெரிய அளவில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறான எண்ணமாகும். ஏனெனில் நீங்கள் சிறிய அளவிலும் முதலீட்டை தொடங்கலாம்.
உங்கள் வருமானத்திற்கு ஏற்ப நீங்கள் எந்த முதலீட்டை தொடங்கினாலும், அதைச் செய்யுங்கள். ஏனென்றால் முதலீடு மட்டுமே உங்கள் பணத்தை அதிகரிக்கும். ஒருவர், பணத்தைச் சேமித்து பாதுகாப்பாக வைத்திருந்தால் அது பின்னாள்களில் உதவும்.
அந்த வகையில் அஞ்சலக ஆர்.டி மற்றும் பி.பி.எஃப் திட்டங்கள் முதன்மையாக உள்ளன.
அஞ்சல ஆர்.டி திட்டங்கள்
போஸ்ட் ஆஃபீஸ் ரெக்கரிங் டெபாசிட் அல்லது போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டி திட்டம் என்பது உண்டியல் சேமிப்பு போன்றது. இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டம் சிறு முதலீட்டாளர்கள் தங்கள் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு கார்பஸை உருவாக்க உதவுகிறது.
இந்த முதலீட்டை ரூ.100-ல் கூட தொடங்கலாம். ஒருமுறை முதலீடு செய்ய ஆரம்பித்தால் 5 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். தற்போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் 6.7% ஆகும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ.30,000 முதலீடு செய்வீர்கள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.35,681 கிடைக்கும். வட்டியாக மடடும் ரூ.5,681 பெறுவீர்கள்.
பி.பி.எஃப் திட்டம்
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ரூ.6,000 முதலீடு செய்வீர்கள். தற்போது PPFக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 டெபாசிட் செய்வதன் மூலம், 15 ஆண்டுகளில் ரூ.1,62,728-ஐ 7.1 சதவீத வட்டியில் சேர்க்கலாம்.
5.5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டால், 20 ஆண்டுகளில் ரூ.2,66,332 ஆகவும், 25 ஆண்டுகளில் ரூ.4,12,321 ஆகவும் சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“