Did you transfer money to the wrong account: டிஜிட்டல் சேவைகள் நம்முடைய வாழ்வில் இடம் பெற துவங்கிய பின்னால் நாம் யாருக்காவது உடனடியாக பணம் அனுப்ப வேண்டியது இருந்தால் நாம் நம்முடைய இருப்பிடத்தில் இருந்தே பணம் அனுப்பிக் கொள்ள ஆரம்பித்துவிட்டோம். இன்றைய அறிவியல் உலகில் இது ஒரு மிகப்பெரிய சாதனையாக மட்டுமின்றி பல கோடிக்கணக்கான மக்கள் தங்களின் பணத்தை அனுப்பவோ, பெறவோ வங்கிகளில் கால் கடுக்க காத்துக் கொண்டிருக்கும் நிற்கின்ற நேரத்தை வெகுவாக குறைத்துள்ளது. ஜிபே, யூ.பி.ஐ, ஆன்லைன் பேங்கிங், நெட் பேங்கிங் என அனைத்து அம்சங்களும் நம்முடைய வேலையை வெகுவாக குறைத்தாலும், மனிதர்களாகிய நாம் செய்யும் தவறு என்று ஒன்று இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் மாட்டோம். ஆனால் சில சமயங்களில் யாருக்காவது பணம் செலுத்த நினைத்து வங்கி கணக்கு எண்ணை மாற்றி பணம் அனுப்பி விடுவோம். சிறிய தொகையாக இருந்தால் பரவாயில்லை. அதிக பணமாக இருந்தால் என்ன செய்வது? இது போன்ற சங்கடங்களை தவிர்க்க இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உடனே உங்களின் வங்கிக்கு இந்த தகவலை கூறவும்?
நீங்கள் தவறான வங்கிக் கணக்கு பணம் அனுப்பிவிட்டால் சிறிதும் நேர விரையம் செய்யாமல் உங்கள் வங்கி சேவை மையத்திற்கு “கால்” செய்து எந்த வங்கி கணக்கு பணம் செலுத்தினீர்கள் என்பது தொடர்பான விபரங்களை குறிப்பிடவும். அவர்கள் உங்களை மின்னஞ்சல் செய்ய கூறும் பட்சத்தில் எப்போது எந்த நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் செய்தீர்கள் என்பதையும், உங்களின் வங்கிக் கணக்கு எண், நீங்கள் பண பரிவர்த்தனை மேற்கொண்ட வங்கிக் கணக்கு ஆகிய அனைத்தையும் பட்டியலிட்டு மின்னஞ்சல் செய்யவும்.
இன்வேலிட் கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டிருந்தால்?
ஒருவேளை உங்களின் பணம், பயன்பாட்டிலேயே இல்லாத ஒரு வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், ”ஆட்டோமேட்டிக்காக” உங்களின் கணக்கிற்கு மாற்றி அனுப்பப்படும். அப்படி உங்களுக்கு பணம் ஏதும் கிடைக்கவில்லை என்றால் உடனே நீங்கள் உங்கள் வங்கி கிளை மேலாளரை அணுகவும். தவறான வங்கிக் கணக்கு அல்லது ஐ.எஃப்.சி. தவறாக உள்ளீடு செய்யப்பட்டிருந்தாலோ உங்களின் பணம் உங்களின் கணக்கிற்கு மீண்டும் வரவு வைக்கப்பட்டுவிடும்.
பயன்பாட்டில் இருக்கும் கணக்கில் உங்கள் பணம் வரவு வைக்கப்பட்டிருந்தால்?
உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம், பயன்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கிற்கு தவறாக மாற்றப்பட்டிருந்தால், அந்த பணம் உங்களுக்கு கிடைக்க சற்று தாமதமாகும். நகரின் எந்தக் கிளையில் உங்கள் பணம் மாற்றப்பட்டது என்ற விவரங்களை உங்கள் வங்கியிலிருந்து பெறலாம். தவறான பரிவர்த்தனை பற்றி நீங்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் இந்த விவரங்களை நீங்களை நீங்கள் பெற்றுக் கொள்ள இயலும். . தவறாக மாற்றப்பட்ட பணத்தை திரும்பப் பெற, வங்கி கணக்கின் உரிமையாளரிடம் அனுமதி கேட்கப்படும்.
அப்படி அவர் பணத்தை திருப்பி அளிக்க மறுக்கும் பட்சத்தில் நீங்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்யலாம். ஆயினும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த உரிமை ரிசர்வ் வங்கி விதிகளை மீறும் சூழலில் வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, பயனாளியின் கணக்கைப் பற்றிய சரியான தகவலை வழங்குவது “லிங்கர்களின்” பொறுப்பாகும். லிங்கர் தவறு செய்யும் பட்சத்தில் அதற்கு வங்கிகள் பொறுப்பேற்காது என்று ஆர்.பி.ஐ விதிகள் கூறுகிறது.
ஆர்.பி.ஐ. வழிகாட்டுதல்கள்
நீங்கள் ஒவ்வொரு முறை பரிவர்த்தனை மேற்கொள்ளும் போதும், இந்த பரிவர்த்தனை தவறாக இருக்கும் பட்சத்தில் இந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கவும் என்று கூறும். அப்படி ஏதாவது நடந்தால் வங்கிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே, தவறான கணக்கிலிருந்து சரியான வங்கிக் கணக்கிற்கு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வங்கிகள் பொறுப்பேற்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.