ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) லாக்கர் வாடகைக் கட்டணங்களைத் திருத்தியுள்ளது. இது லாக்கரின் இருப்பிடம் மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடும்.
அதன் லாக்கர் வாடிக்கையாளர்கள் தங்கள் லாக்கர் ஹோல்டிங் கிளையைத் தொடர்பு கொண்டு, திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஜூன் 30 2023க்குள் குறைந்தபட்சம் 50% லாக்கர் வைத்திருப்பவர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
எஸ்பிஐயின் சிறிய லாக்கர் வாடகைக் கட்டணம்
நகர்ப்புற மற்றும் மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000+ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களுக்கு ரூ.1500+ஜிஎஸ்டியை வங்கி வசூலிக்கிறது.
எஸ்பிஐயின் நடுத்தர லாக்கர் வாடகைக் கட்டணம்
நகர்ப்புற மற்றும் மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4000+ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களுக்கு ரூ.3000+ஜிஎஸ்டியை வங்கி வசூலிக்கிறது.
எஸ்பிஐயின் பெரிய லாக்கர் வாடகைக் கட்டணம்
நகர்ப்புற மற்றும் மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.8000+ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களுக்கு ரூ.6000+ஜிஎஸ்டியை வங்கி வசூலிக்கிறது.
எஸ்பிஐயின் கூடுதல் பெரிய லாக்கர் வாடகைக் கட்டணம்
நகர்ப்புற மற்றும் மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,000+ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களுக்கு ரூ.9000+ஜிஎஸ்டியை வங்கி வசூலிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“