puducherry | christmas | புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம், உப்புக்காரவிதியில் வசிப்பவர் சு.சுந்தரராசு. இவர், ஒவ்வொரு வருடமும்
கிருஸ்துமஸ் குடில் செய்வது வழக்கம்.
இந்த வருடம் 11-வது முறையாக வித்தியாசமான முறையில் இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை விழிப்புணர்வுவை மையமாக வைத்து
ரூபாய் (நகல்) நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு கிருஸ்துமஸ் குடில் செய்து உள்ளார்.
கடந்த காலங்களில் இவர், பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் மறு சூழற்சி விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பாட்டில்கலால் வடிவமைத்த கிருஸ்துமஸ் குடில், மரம் வளர்போம் என்ற விழிப்புணர்வு மூலம்
தேங்காய்களை கொண்டு வடிவமைத்து கிருஸ்துமஸ்குடில் என விழிப்புணர்வு செய்துள்ளார்.
தற்போதைய கிறிஸ்துமஸ் குடியிலில் பல் வேறு வகையான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களான BHIM, போன் பே Pay,, Paytm, Google Pay, PayPal, Amazon Pay, MyJio, Kotak811 போன்ற நிறுவன செயலி குறியீடுகள் குடிலில் வைக்கப்பட்டு உள்ளன.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“