/indian-express-tamil/media/media_files/2025/05/28/pcF4Fow5GM7Mw5z1ACk7.jpg)
பணம் ஈட்டுவதற்கு தற்போதைய சூழலில் டிஜிட்டல் மார்கெட்டிங் பெரிதும் உதவுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது, நீங்கள் ஒரு பகுதியில் ஒரு தொழில் செய்து வருகிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த தொழிலை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பேன்ற டிஜிட்டல் தளங்களுக்கு கொண்டு செல்வதை டிஜிட்டல் மாட்கெட்டிங் என்று கருதுகின்றனர். அந்த வகையில், டிஜிட்டல் மார்கெட்டிங் தொடர்பான விவரங்கள் அபின்தாஸ் யூடியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை தற்போது பார்க்கலாம்.
நாம் எந்த மாதிரியான டிஜிட்டல் மார்கெட்டிங் செய்யப் போகிறோம் என்று முடிவு செய்வதற்காக அது தொடர்பான தகவல்களை நன்கு ஆராய வேண்டும். அவை, இணையத்தில் எந்த அளவிற்கு விளம்பரப்படுத்தப்படுகின்றன என்றும், இதன் வளர்ச்சி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றும் அறிந்து கொள்வது அவசியம்.
ஒரு நபர் டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் களமிறங்குகிறார் என்றால் அது குறித்த அனைத்து விவரங்களையும் அறிவது அவசியம் என்று பார்த்தோம். இதனை புரிந்து கொள்வதற்காக ஏற்கனவே, அந்த துறையில் இருக்கும் நபரின் அனுபவங்கள் மற்றும் நுணுக்கங்களை கேட்டு அறிய வேண்டும். புத்தகம் அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக அறிந்து கொள்வதை விட, அதில் செயல்பட்டு வரும் ஒரு நருக்கு அதன் ஆழம் அதிகமாக புரியும். இது போன்ற நபர்களை Linkedin உள்ளிட்ட தளங்களில் இருந்து தொடர்பு கொள்ளலாம்.
இது போன்ற தகவல்களை பெற்ற பின்னர், நாம் தேர்வு செய்துள்ள டிஜிட்டல் மார்கெட்டிங் வகையில் கண்டெண்ட் உருவாக்க வேண்டும். இந்தப் பதிவுகள் பயனர்களிடம் எந்த அளவிற்கு சென்றடைந்தது என்று அறிந்து கொள்வது மிக முக்கியம். இது பல்வேறு நிறுவனங்களை நீங்கள் அணுகும் போது, உங்கள் மீது நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கு காரணியாக அமையும்.
டிஜிட்டல் மார்கெட்டிங் என்பது நாள்தோறும் கற்றுக் கொள்ளும் ஒரு துறையாகும். இதற்காக உங்களைப் போன்ற டிஜிட்டல் மார்கெட்டிங் செய்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது வரை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், இது குறித்த ஆய்வுக் கட்டுரைகளை படிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் சரியாக பின்பற்றினால் டிஜிட்டல் மார்கெட்டிங் துறையில் இருந்து நல்ல வளர்ச்சி பெற முடியும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.