scorecardresearch

பி.பி.எஃப். திட்டத்தில் ஏன் முதலீடு கூடாது: 5 காரணங்கள்!

Public Provident Fund (PPF) : மற்ற எல்லா சேமிப்புகள் அல்லது முதலீட்டுத் திட்டத்தைப் போலவே, PPF-க்கும் சில குறைபாடுகள் உள்ளன, முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

PPF Investment Disadvantages
தற்போதைய PPF வட்டி விகிதம் 7.1% ஆகும்.

Public Provident Fund (PPF) disadvantages: பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஒரு நல்ல சேமிப்புத் திட்டமாகும், இது நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய கார்பஸைக் குவிப்பதற்குப் பயன்படுத்தப்படலாம்.
ஆனால் மற்ற எல்லா சேமிப்பு அல்லது முதலீட்டுத் திட்டத்தைப் போலவே, PPF க்கும் சில குறைபாடுகள் உள்ளன. அவைகளை முதலீடு செய்வதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

1) வட்டி குறைவு: தற்போதைய PPF வட்டி விகிதம் 7.1% ஆகும், இது 2022-23 நிதியாண்டுக்கான EPF வட்டி விகிதமான 8.15% ஐ விடக் குறைவு.

2) நீண்ட முதிர்ச்சி காலம்: PPF கணக்கு 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. மிக நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பொருத்தமானது. எந்தவொரு குறுகிய கால தேவைகளுக்கும், முதலீட்டாளர்கள் மற்ற விருப்பங்களைத் தேட வேண்டியிருக்கும்.

3) அதிகபட்ச முதலீட்டு வரம்பு: PPF கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ.1.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை கடந்த பல ஆண்டுகளாக அரசு உயர்த்தவில்லை.
அதிக தொகையை முதலீடு செய்ய விரும்பும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, VPF ஒரு சிறந்த தேர்வாக வருகிறது, அங்கு கூடுதல் வரி ஏதும் இல்லாமல் சம்பளத்தில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை ஒதுக்கலாம்.

4) முன்கூட்டியே திரும்பப் பெற கடுமையான விதிகள்: முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கு பல கடுமையான நிபந்தனைகள் உள்ளன. உதாரணமாக, ஒரு நிதியாண்டில் நீங்கள் ஒரு முறை மட்டுமே திரும்பப் பெற முடியும்.
அதுவும், கணக்கு தொடங்கிய ஆண்டைத் தவிர்த்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் எடுக்க முடியும். அதாவது, நீங்கள் 2023-24 நிதியாண்டில் PPF கணக்கைத் திறந்தால், 2029-30 நிதியாண்டில் மட்டுமே முதல் பணத்தை எடுக்க முடியும்.

5) முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படாது: நீங்கள் PPF கணக்கில் முதலீடு செய்வதை நிறுத்த விரும்பினால், நீங்கள் விரும்பும் போதெல்லாம் அதை முன்கூட்டியே மூட முடியாது.
PPF விதிகளின்படி, கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டின் இறுதியில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மட்டுமே முன்கூட்டியே மூடுவது அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Disadvantages of public provident fund