/tamil-ie/media/media_files/uploads/2018/12/FD-kqDG-621x414@LiveMint.jpg)
2024 ஃபிப்ரவரி மாதத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை திருத்திய 15 வங்கிகள் தெரியுமா?
Fixed Deposits | 2024 பிப்ரவரி மாதத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்திய வங்கிகள், திருத்தப்பட்ட புதிய வட்டி விகிதம் குறித்து பார்க்கலாம். இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு பொருந்தும்.
அந்த வகையில் கீழ்காணும் வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 2024 பிப்.28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தப் புதிய விகிதத்தின்படி, 200 நாள்கள் டெபாசிட்களுக்கு 7 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதிய வட்டி விகிதங்கள் பிப்.10 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தப் புதிய விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பொருந்தும். வங்கி 444 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்குகிறது. வங்கியின் வட்டி விகிதங்கள் 4 சதவீதம் முதல் தொடங்குகின்றன.
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 444 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.40 சதவீதம் வட்டி வழங்குகிறது. வங்கியின் வட்டி விகிதங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு பொருந்தும்.
இந்த விகிதங்கள் பிப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு பொருந்தும் இந்த வட்டி விகிதங்கள் பிப்.1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
பிற வங்கிகள்
ஆக்ஸிஸ் வங்கி 17-18 மாதங்கள் டெபாசிட்களுக்கு 7.20 சதவீதமும், தனலட்சுமி வங்கி 555 நாள்கள் டெபாசிட்களுக்கு 7.25 சதவீதமும், ஃபெடரல் வங்கி 500 நாள்கள் டெபாசிட்களுக்கு 7.50 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 18-21 மாதங்கள் டெபாசிட்களுக்கு 7.25 சதவீதமும், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 15 மாதங்கள் டெபாசிட்களுக்கு 7.20 சதவீதமும், ஐ.டி.பி.ஐ வங்கி 3 ஆண்டுகள் டெபாசிட்களுக்கு 7 சதவீதமும், இண்டஸ்இந்த் வங்கி 2 ஆண்டுகள் டெபாசிட்களுக்கு 7.75 சதவீதம் வட்டியும், கரூர் வைஸ்யா வங்கி 444 டெபாசிட்களுக்கு 7.50 சதவீதமும், கோடக் மகிந்திரா வங்கி 390 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.40 சதவீதமும், ஆர்.பி.எல் வங்கி 546 நாள்கள் டெபாசிட்டுக்கு 8.10 சதவீதம் வட்டியும், சௌத் இந்தியன் வங்கி 400 நாள்கள் டெபாசிட்டுக்கு 7.40 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.