/tamil-ie/media/media_files/uploads/2019/01/mla-3-9.jpg)
சேமிப்பு கணக்குக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்கும் வங்கி தெரியுமா?
/indian-express-tamil/media/media_files/AjRcgo7SX73roAapj0ok.jpeg)
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு வட்டி
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கை ரூ.500 கட்டி தொடங்கிகொள்ளலாம். இதில் குறைந்தப்பட்சமாக ரூ.50 வரை எடுத்துக்கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்குக்கு 2024 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 4 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/ls-2000-money-9.jpg)
வங்கிகளின் வட்டி விகிதம்
எஸ்பிஐ, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பிஎன்பி, யூனியன் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஆகியவற்றின் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/05/money.jpg)
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி ரூ. 1 லட்சத்துக்கும் குறைவான தொகைக்கு 3% வட்டியும், ரூ. 1 லட்சம் முதல் ரூ. 3 லட்சத்துக்கும் குறைவான இருப்புகளுக்கு 3.50% வட்டியும் வழங்குகிறது. ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான நிலுவைகளுக்கு வங்கி 4% வழங்குகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான இருப்புகளுக்கு அதிகபட்சமாக வங்கி 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/08/union-bank.jpg)
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.50 லட்சம் வரையிலான இருப்புகளுக்கு 2.75% வட்டி விகிதத்தையும், ரூ. 50 லட்சத்துக்கு மேல் ரூ.100 கோடிக்கு 2.90% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. வங்கி ரூ.100 கோடிக்கு மேல் உள்ள இருப்புகளுக்கு 3.10% மற்றும் ரூ.500 கோடிக்கு மேல் ரூ.1000 கோடிக்கு 3.40% வழங்குகிறது. அதிகபட்சமாக 4.20% வட்டி விகிதம் ரூ.2000 கோடிக்கு மேல் உள்ள நிலுவைகளுக்கு வழங்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/04/rajini-60.jpg)
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.10 லட்சத்திற்கும் குறைவான இருப்புகளுக்கு 2.70% வட்டி விகிதத்தையும், ரூ.10 லட்சம் முதல் ரூ.100 கோடிக்குக் குறைவான கணக்கு இருப்புகளுக்கு 2.75% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட கணக்கு இருப்புக்கு 3% வட்டியை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/03/thalapathy-62-3.jpg)
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்பு முதலீடுக்கு, வட்டி விகிதம் 3% ஆக இருக்கும். 50 லட்சத்திற்கு மேல் உள்ள நாள் முடிவில், வங்கி 3.5% வட்டியை வழங்குகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/hdfc-bank-interest-a.jpg)
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியில் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான இருப்புகளுக்கு 3% மற்றும் ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான இருப்புகளுக்கு 3.50% ஆக உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/sbi2.jpg)
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.10 கோடி வரை இருப்பு வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் 2.70% ஆக நிர்ணயித்துள்ளது. மேலும் ரூ.10 கோடிக்கு மேல் இருப்புக்கு 3% ஆக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.