பொதுக் குடிமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையில், மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த வட்டி விகிதங்கள் வங்கியைப் பொறுத்து 0.50% முதல் 0.75% வரை மாறுபடும். ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில பெரிய வங்கிகள், குறிப்பிட்ட காலத்திற்கு மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களுடன் சிறப்பு நிலையான வைப்புகளை வழங்குகின்றன.
கனரா வங்கி
கனரா வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால டெபாசிட்களுக்கு வங்கி 4% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.75% 444 நாள்கள் டெபாசிட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்தப் புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 11, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான டெபாசிட் தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலங்களில் 3.50% முதல் 7.85% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.85% 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 19, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிகளில் 3.75% முதல் 9.50% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. 546 - 1111 நாட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9.50% வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 7, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி ரூ.3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலங்களில் 3.50% முதல் 7.75% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 7.75% 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்கு வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 19, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ. 3 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கு 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான தவணைக்காலங்களில் 4.60% முதல் 9.10% வரை வட்டி விகிதங்களை வங்கி வழங்குகிறது. அதிகபட்ச வட்டி விகிதம் 9.10% 1500 நாள்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 7, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“