ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75% வரை வட்டி; பொதுத்துறை வங்கி அசத்தல் அறிவிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவிகிதம் 3 வருட டெபாசிட்களில் வழக்கமான வைப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்தக் குடிமக்களுக்கு..
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவிகிதம் 3 வருட டெபாசிட்களில் வழக்கமான வைப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. மூத்தக் குடிமக்களுக்கு..
வங்கிகளின் 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரெப்போ விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால், வட்டி விகிதம் டெபாசிட் காலத்துடன் உயரும். இதற்கிடையில் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகள் டெபாசிட் தொகையை ரூ.2 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக அதிகரித்துள்ளன. இதற்கிடையில், 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
வங்கிகளின் 3 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்
வங்கி
வட்டி
மூத்தக் குடிமக்கள் வட்டி
கோடக் மகிந்திரா வங்கி
7
7.6
பஞ்சாப் நேஷனல் வங்கி
7.25
7.75
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
7
7.50
பேங்க் ஆஃப் பரோடா
6.75
7.25
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
7
7.50
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
7
7.50
பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதம் 7.25 சதவிகிதம் 3 வருட டெபாசிட்களில் வழக்கமான வைப்புதாரர்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் 7.75 சதவிகிதம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ஹெச்.டி.எஃப்.சி வங்கி தனது 3 ஆண்டு வைப்புத்தொகையில் வழக்கமான குடிமக்களுக்கு 7 சதவீதத்தையும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதத்தையும் வழங்குகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் 3 வருட டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7 சதவீதத்தை வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகிறது.
Advertisment
Advertisements
பேங்க் ஆஃப் பரோடா ஆண்டுக்கு 6.75 சதவிகிதம் முதல் 3 வருட டெபாசிட்கள் மற்றும் 7.25 சதவிகிதம் மூத்த குடிமக்களுக்கு வழங்குகிறது. பாரத ஸ்டேட் வங்கி (SBI) வழக்கமான குடிமக்களுக்கு 7 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமும் வழங்குகிறது. கோடக் மஹிந்திரா வங்கியும் அதன் 3 வருட டெபாசிட்டுகளுக்கு அதே வட்டி விகிதத்தை வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கி ஜூலை 1 முதல் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. வட்டி விகிதங்கள் வழக்கமான குடிமக்களுக்கு 3 சதவீதம் முதல் 7.2 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 3.5 முதல் 7.75 சதவீதம் வரையிலும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“