Post Office Tax Saving FD | 5 வருட ஃபிக்ஸட் டெபாசிட் ஆனது தபால் அலுவலக வரி சேமிப்பு வைப்புத் தொகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட தொகை, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவைக்கு வரிச் சலுகை உண்டு.
மேலும், 5 ஆண்டு கால அஞ்சலக எஃப்டியில் ரூ.1.50 லட்சம் வரையிலான முதலீடுகள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகைகளுக்குத் தகுதியுடையவை.
இந்த எஃப்.டி-க்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 7.5 சதவீதம் ஆகும். இந்த FDயில் நீங்கள் சம்பாதிக்கும் வட்டி ஆண்டுதோறும் செலுத்தப்படும் ஆனால் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும். இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்து, எஃப்.டி முடிந்த பிறகு உங்கள் பணத்தை எடுத்தால், வட்டியாக ரூ.4,49,948 கிடைக்கும்.
ரூ.4.50 லட்சம் வட்டி பெறுவது எப்படி?
5 ஆண்டு கால அஞ்சலக எஃப்டியில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்து, அந்தத் தொகைக்கு 7.5 சதவீத வட்டியைப் பெற்றால், ஐந்து ஆண்டுகளில், மொத்த வட்டியாக ரூ.4,49,948 கிடைக்கும்.
இதனால் முதலீட்டின் மதிப்பு ரூ. 14,49,948 ஆக காணப்படும்.
தேசிய சேமிப்பு டைம் டெபாசிட்
ஐந்தாண்டு FD திட்டமானது வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகளை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு ரூ. 50,000க்கும், மற்ற வைப்புதாரர்களுக்கு ரூ. 40,000க்கும் மேல் வட்டி செலுத்தும் போது மூலத்தில் (டிடிஎஸ்) வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில், மைனர் 18 வயதை அடையும் வரை கணக்கை நிர்வகிக்கும் சட்டப்பூர்வ பாதுகாவலருடன் சிறார்களின் பெயரில் உள்ள கணக்குகளையும் தபால் அலுவலகம் ஏற்றுக்கொள்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“