Advertisment

எஃப்.டி-க்கு 9%-க்கு மேல் ரிட்டன்: வட்டியை உயர்த்திய 3 வங்கிகள்!

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (சிறு நிதி வங்கிகள் -SFBs) ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தியிருக்கிறது.

author-image
WebDesk
New Update
Hoe to get more income from fixed deposits? - நிலையான வைப்புத் தொகை மூலம் அதிக வருமானம் பெறுவது எப்படி?

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம், டெபாசிட் காலம் மற்றும் முதலீட்டாளரின் வட்டியை பொறுத்து மாறுபடும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | முதலீட்டாளர் ஒரு ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை தொடங்கும்போது, உத்தரவாதமான வருமானத்தைக் கணக்கிட கொடுக்கப்பட்ட வட்டி விகிதம் பயன்படுத்தப்படும்.

மேலும், முதலீட்டாளர் தேர்ந்தெடுக்கும் காலம், தொகையைப் பொறுத்து வங்கி வட்டி விகிதங்கள் மாறுபடும்.

Advertisment

இதற்கியில், ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (சிறு நிதி வங்கிகள் -SFBs) ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களைத் திருத்தியிருக்கிறது.

அந்த வங்கிகள், வட்டி விகிதம், டெபாசிட் காலம் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (சிறு நிதி வங்கி) பொது குடிமக்களுக்கு 3.75% முதல் 8.50% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

15 மாத காலத்திற்கான அதிகபட்ச வட்டி விகிதம் 8.50% மற்றும் அதே டெபாசிட் காலத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% ஆகும். இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மார்ச் 7, 2024 முதல் அமலுக்கு வருகின்றன.

ஷிவாலிக் சிறு நிதி வங்கி

ஷிவாலிக் சிறு நிதி வங்கி பொது குடிமக்களுக்கு 3.50% முதல் 8.70% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, வட்டி விகிதம் 4% முதல் 9.20% வரை மாறுபடும்.

மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8.70% மற்றும் 9.20% வட்டி விகிதம் 24 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரையிலான டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 2, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.

சூர்யோதாய் சிறு நிதி வங்கி

சூர்யோதாய் சிறு நிதி வங்கி பொது குடிமக்களுக்கு 4% முதல் 9.01% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

மூத்த குடிமக்களுக்கு, வட்டி விகிதங்கள் 4.40% முதல் 9.25% வரை மாறுபடும். மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 9.01% மற்றும் 9.25% வட்டி விகிதம் 2 ஆண்டுகள் மற்றும் 1 மாதம் (25 மாதங்கள்) காலப்பகுதியில் வழங்கப்படுகிறது.

புதிய வட்டி விகிதங்கள், மார்ச் 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment