Advertisment

ரூ.1 லட்சம் வரை கடன்; குறைந்த வட்டியில் பெர்சனல் லோன்: இந்த வங்கிகள் தெரியுமா?

தனிநபர் கடன் என்பது ஈடு அல்லது பிணை தேவையில்லாத பாதுகாப்பற்ற கடனாகும். நல்ல கிரெடிட் ஸ்கோர்கள் தனிநபர் கடன்களை விரைவாகப் பெறலாம். இதற்கு வட்டி விகிதங்கள் மாறுபடுகின்றன.

author-image
WebDesk
New Update
Personal Loans interest rates compared SBI, PNB, HDFC

ரூ.1 லட்சம் வரை பெர்சனல் லோன் வழங்கும் வங்கிகள், அதன் வட்டி விகிதம் குறித்து இங்கு பார்ப்போம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பந்தன் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் 9.47 முதல் 11.15 சதவீதம் வரையிலான வட்டி விகிதங்களை ரூ. 1 லட்சம் தனிநபர் கடனுக்கு 4 ஆண்டு காலத்திற்கு வழங்குகின்றன.

Advertisment

தனிநபர் கடன் என்பது ஈடு அல்லது பிணை தேவையில்லாத பாதுகாப்பற்ற கடனாகும். நல்ல கிரெடிட் ஸ்கோர்கள் தனிநபர் கடன்களை விரைவாகப் பெறலாம்.

திடீர் மற்றும் காப்பீடு செய்யப்படாத மருத்துவச் செலவுகள், வேலை இழப்பால் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் அவசரத் தேவைகளுக்காக உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஏனென்றால் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம்.

கடனைப் பெறுவது எளிதானது. ஆனால் மாதாந்திர தவணையைச் சரியாக கட்ட தவறினாலோ, அதைவிட மோசமாக இருந்தாலோ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அந்த வகையில், மலிவான வட்டி விகிதத்தில் கிடைக்கும் தனிநபர் கடன்களை பார்க்கலாம். 

பாங்க் ஆஃப் இந்தியா

ஆக்சிஸ் பேங்க், பாங்க் ஆஃப் இந்தியா, சிட்டி பேங்க், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவை தனிநபர் கடனுக்கு 10.75 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும், 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ.2 ஆயிரத்து 572 ஆகும்.

பந்தன் வங்கி 
ரூ.1 லட்சம் தனிநபர் கடனுக்கு 9.47 சதவீதத்தில் தொடங்கி, 4 வருடங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் மலிவான வட்டி விகிதத்தை வழங்குகிறது. மாதம் இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 592 ஆக இருக்கும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனிநபர் கடனுக்கு 12.4 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை வசூலிக்கிறது. இங்கு, 4 ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1-லட்சம் தனியார் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 653 ஆகும். 

பாரத ஸ்டேட் வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 11.15 சதவீதத்திலிருந்து வசூலிக்கிறது. 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ.2 ஆயிரத்து 592 ஆகும்.

யெஸ் வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை தனிநபர் கடனுக்கு 10.99 சதவீத வட்டி விகிதத்தை விதிக்கின்றன.
யெஸ் வங்கியில், 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ.2 ஆயிரத்து 584 ஆகும்.

இண்டஸ்இந்த் வங்கி 

தனியார் துறை கடன் வழங்கும் இண்டஸ்இந்த் வங்கி  (IndusInd bank) தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.49 சதவீதத்திலிருந்து வழங்குகிறது. இங்கு 4 ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.2 ஆயிரத்து 560 ஆகும்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனிநபர் கடனுக்கு 11.75 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கிறது. இங்கு, 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 621 ஆகும்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

தனியார் துறை கடன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி, தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.8 சதவீதத்தில் இருந்து வசூலிக்கிறது.
இங்கு ஆண்டு திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 1 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.2 ஆயிரத்து 575 ஆகும்.

பேங்க் ஆஃப் பரோடா
அரசு வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கி தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 11.4 சதவீதத்திலிருந்து வழங்குகிறது.

இந்த வங்கிகளில் 4 வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இ.எம்.ஐ. ரூ. 2 ஆயிரத்து 604 ஆகும்.

இந்தத் தகவல் மார்ச் 20, 2024 அன்று அந்தந்த வங்கிகளின் இணையதளங்களில் இருந்து தரவு சேகரிக்கப்பட்டது ஆகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Loan Scheme
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment