Loan Scheme | தனிநபர் கடன் என்பது பிணையம் தேவையில்லாத பாதுகாப்பற்ற கடனாகும். நல்ல கிரெடிட் ஸ்கோர்கள் தனிநபர் கடன்களை விரைவாகப் பெறுவதை எளிதாக்குகிறது. திடீர் மற்றும் காப்பீடு செய்யப்படாத மருத்துவச் செலவுகள், வேலை இழப்பால் ஏற்படும் சூழ்நிலைகள் மற்றும் பல போன்ற அவசரத் தேவைகளுக்காக உங்களுக்குப் பணம் தேவைப்பட்டால் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. கடனைப் பெறுவது எளிதானது, ஆனால் உங்கள் சமமான மாதாந்திர தவணைகளைத் தவறவிட்டால் உங்கள் கடன் கிரெடிட் ஸ்கோர்-ஐ மோசமாக்கிவிடும். இந்த நிலையில், மலிவான தனிநபர் கடன்களை வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி, 9.47 சதவீதத்தில் தொடங்கி நான்கு வருடங்கள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் வரும் ரூ. 1 லட்சம் தனிநபர் கடனுக்கான மலிவான வட்டி விகிதத்தை வழங்குகிறது. இதன், சமமான மாதாந்திர தவணை (EMI) ரூ. 2,592 ஆக இருக்கும்.
ஆக்ஸிஸ் வங்கி
ஆக்சிஸ் பேங்க், பாங்க் ஆஃப் இந்தியா, சிட்டி பேங்க், ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகியவை தனிநபர் கடனுக்கு 10.75 சதவீதத்தில் இருந்து வட்டி விகிதத்தை விதிக்கின்றன. நான்கு வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 1 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.2,572 ஆகும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
தனியார் துறை கடன் வழங்கும் ஐசிஐசிஐ வங்கி, தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 10.8 சதவீதத்தில் இருந்து வசூலிக்கிறது. நான்கு வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ. 1 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.2,575 ஆகும்.
எஸ்.பி.ஐ
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனிநபர் கடனுக்கான வட்டி விகிதத்தை 11.15 சதவீதத்திலிருந்து வசூலிக்கிறது. நான்கு வருட திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.1 லட்சம் கடனுக்கான இஎம்ஐ ரூ.2,592 ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“