ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குகின்றன. மேலும், இந்தத் திட்டங்கள் அவசரகால கார்பஸை உருவாக்க உறுதியாக உள்ளன.
அந்த வகையில் வங்கிகளின் 2 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா இரண்டு வருட FDகளுக்கு 7.25 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி இரண்டு வருட FDகளுக்கு 6.80 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்த வங்கிகளில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால் முறையே ரூ.1.15 லட்சம் மற்றும் ரூ.1.14 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.
தனியார் துறை வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி வங்கி 7 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1.15 லட்சம் 2 ஆண்டுகளில் ரிட்டன் ஆக கிடைக்கும்.
ஸ்டேட் பேங்க் இந்தியா வங்கியும் இதே வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த வங்கியில் 2 ஆண்டுகால டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால், ரூ.1.15 லட்சம் வட்டி கிடைக்கும்.
கனரா வங்கி 2 ஆண்டுகால டெபாசிட்டுக்கு 6.85 சதவீதம் வட்டி வழங்குகிறது.இதில் 2 ஆண்டுகால டெபாசிட்டில் முதலீடு செய்தால் 1.15 லட்சம் ரிட்டனாக கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“