ELSS Tax saver funds | ரூ.1.50 லட்சம் முதலீட்டை 25 ஆண்டுகளில் ரூ.1 கோடியாக உயர்த்திய இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள், அதன் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் இங்கே.
இ.எல்.எஸ்.எஸ் மியூச்சுவல் ஃபண்டுகள் | மூன்று இ.எல்.எஸ்.எஸ் அல்லது வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த 25 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் லம்ப்சம் முதலீட்டை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளது. இந்தப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
ஹெச்.டி.எஃப்.சி இ.எல்.எஸ்.எஸ் (HDFC ELSS) வரி சேமிப்பு ஃபண்டு கடந்த 25 ஆண்டுகளில் ரூ. 1.5 லட்சத்தின் மொத்த முதலீட்டை ரூ.2.53 கோடியாக மாற்றியது. அதே காலகட்டத்தில் ஃப்ராங்ளின் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு (Franklin India ELSS Tax Saver Fund) குறிப்பிட்ட காலப்பகுதியில் மொத்த முதலீட்டை ரூ.1.89 கோடியாக உயர்த்தியுள்ளது.
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகள் 25 ஆண்டு ரிட்டன்
இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (%)
ஹெச்.டி.எஃப்.சி இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
22.77
ஃப்ராங்ளின் இந்தியா இ.எல்.எஸ்.எஸ் வரி சேமிப்பு ஃபண்டு
21.34
எஸ்.பி.ஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்டு
18.76
எஸ்பிஐ லாங் டெர்ம் ஈக்விட்டி ஃபண்ட், பழமையான ELSS அல்லது வரி சேமிப்பு நிதி, இதே கால கட்டத்தில் மொத்த முதலீட்டை ரூ.1.10 கோடியாக மாற்றியது. இந்த திட்டம் குறிப்பிட்ட காலப்பகுதியில் 18.76% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை (CAGR) வழங்கியது. மற்ற இ.எல்.எஸ்.எஸ் அல்லது வரிச் சேமிப்பு நிதிகள் கடந்த 25 ஆண்டுகளில் மொத்த முதலீட்டை ரூ.18.11 லட்சத்திலிருந்து ரூ.80.98 லட்சமாக மாற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்டு திட்ட முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. ஆகவே, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விதிமுறைகளையும் கவனமாக படிக்கவும். மேற்கூறிய தரவுகள் கடந்தகால வருவாய் மட்டுமே; இது நிகழ்கால வருவாய்க்கு எவ்விதத்திலும் உறுதியளிக்காது. மேலும், இவை தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் கருத்துக்கள் அல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“