Epfo Balance Check | ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) சந்தாதாரர்கள் கடந்த நிதியாண்டில் தங்கள் கணக்குகளுக்கான வட்டியைப் பெறவில்லை. இந்த நிலையில் இ.பி.எஃப்.ஓ விடுத்துள்ள அறிக்கையில், “அன்புள்ள உறுப்பினரே, இந்தச் செயல்முறை தற்போது தயாராகி வருகிறது, விரைவில் அங்கு காண்பிக்கப்படலாம். வட்டி வரவு வைக்கப்படும் போதெல்லாம், அது திரட்டப்பட்டு முழுமையாக செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது, இது முந்தைய ஆண்டின் 8.15% விகிதத்தில் இருந்து 8.25% ஆக நிர்ணயித்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான EPF உறுப்பினர்களை பாதிக்கிறது.
மார்ச் 2024 நிலவரப்படி, 2022-23 நிதியாண்டிற்கான வட்டி 28.17 கோடி EPF உறுப்பினர் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2022-23 நிதியாண்டுக்கான வட்டி இன்றுவரை EPFO இன் 28.17 கோடி உறுப்பினர் கணக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. உறுப்பினர் அவர்களின் EPF பாஸ்புக்கை தயவுசெய்து சரிபார்க்கலாம்.
இ.பி.எஃப்.ஓ வட்டியை பார்ப்பது எப்படி?
உமாங் செயலி மூலமாக (Umang App) வாடிக்கையாளர்கள் தங்களின் இ.பி.எஃப்.ஓ வட்டியை சரிபார்க்கலாம். மேலும், SMS இல் சேவையைப் பெற, "EPFOHO UAN" என்ற செய்தியை 7738299899 க்கு அனுப்பவும். 9 பிராந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் கணக்கு நிலையைச் சரிபார்க்கலாம். இதுமட்டுமின்றி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பாஸ்புக் விவரங்களை அணுகலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“