பாதுகாப்பான முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய அனைவரும் விரும்புகின்றனர். இவர்களுக்கு, அஞ்சல் அலுவலக திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அத்தகைய முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வழி ஆகும்.
இந்தத் திட்டம் அனைத்து வங்கிகளிலும் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், நீங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்ய வேண்டும்.
திட்டத்தில், 7.1 சதவீத வட்டியைப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்திற்கான அதிகபட்ச ஆண்டு வரம்பு ரூ. 1.5 லட்சம் ஆகும்.
மேலும், இந்த பி.எஃப் திட்டத்திலிருந்து வரிச் சலுகைகளையும் பெறலாம்.
ரூ.24 லட்சம் பெறுவது எப்படி?
பி.பி.எஃப் திட்டத்தில் ரூ.24 லட்சத்தைப் பெற தினமும் ரூ.250 சேமித்தால் போதுமானது. அதாவது 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.7,500 முதலீடு செய்ய வேண்டும்.
நீங்கள் 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டம் 15 வருட திட்டமாக இருப்பதால், 40 வயது வரை மொத்தம் ரூ.13,50,000 முதலீடு செய்வீர்கள்.
இதன்மூலம், திட்டத்தில் 7.1 சதவீத வருமானத்தைப் பெற்றால், வட்டியாக ரூ. 10,90,926 கிடைக்கும், மேலும் மொத்த முதிர்வுத் தொகை ரூ.24,40,926 ஆக இருக்கும்.
கடன் பெறும் வசதி
பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் கடன் வசதி கிடைக்கும். உங்கள் பி.பி.எஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் கடன் பெறுவீர்கள்.
இந்தக் கடன் பாதுகாப்பற்ற கடனை விட மலிவானது. விதிகளின்படி, பிபிஎஃப் கடனுக்கான வட்டி விகிதம் பிபிஎஃப் கணக்கின் வட்டி விகிதத்தை விட 1 சதவீதம் மட்டுமே அதிகம்.
அதாவது, நீங்கள் பிபிஎஃப் கணக்கில் 7.1 சதவீத வட்டியை எடுத்துக் கொண்டால், கடனைப் பெறுவதற்கு 8.1 சதவீத வட்டியைச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“