Indian Bank Fixed Deposit Interest Rates | ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள், பணப்புழக்கம், உறுதியான வட்டி வருமானத்தை சீரான இடைவெளியில் வழங்குகின்றன. ஆகவே இந்தத் திட்டங்களில் பலரும் விரும்பி முதலீடு செய்கின்றனர்.
அந்த வகையில் 2 ஆண்டுகள் கால அளவு கொண்ட டெபாசிட்களில் பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.80 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.14 லட்சமாக ரிட்டன் கிடைக்கும்.
கனரா வங்கி
கனரா வங்கி இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.85 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இதில், முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் 2 ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக வளரும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஆகவே, இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக ரிட்டன் கிடைக்கும்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இரண்டு வருட FDகளுக்கு 7.10 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மற்றொரு தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியும் இதே வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி, 2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.14 லட்சமாக உயரும்.
பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் அனைவராலும் விரும்பப்படுகின்றன. இந்த முதலீடுகள் சிறந்த கார்பஸை உருவாக்க பயன்படுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“