இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் | பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்கள் "Ind Super 400" மற்றும் "Ind Supreme 300 days" என்று அழைக்கப்படுகின்றது.
இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட்
இந்தியன் வங்கி சிறப்பு ஃபிக்ஸட் டெபாசிட் “இந்த் சூப்பர் 400 நாள்கள்” என்று அழைக்கப்படுகிறது. இந்த டெபாசிட் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.10ஆயிரம் முதல் ரூ.3 கோடிக்குள் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் பொதுமக்களுக்கு 7.25 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.75 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
இந்த் சூப்பர் 300 நாள்கள்
இந்தச் சிறப்பு திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். திட்டத்தில் சாதாரண குடிமக்களுக்கு 7.05 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 7.55 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.80 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
இந்தியன் வங்கி எஃப்.டி வட்டி விகிதங்கள்
இந்தியன் வங்கி 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலவரையறையில் 2.8% முதல் 7.25% வரை (சிறப்பு FDகள் உட்பட) நிலையான வைப்பு வட்டி விகிதத்தை வழங்குகிறது. திருத்தப்பட்ட விகிதம் ஜூன் 12, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
டெபாசிட் காலம் |
வட்டி விகிதம் (%) |
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை | 2.80% |
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை | 2.80% |
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை | 3.00% |
46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை | 3.25% |
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை | 3.50% |
121 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை | 3.85% |
181 நாட்கள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவானது | 4.50% |
9 மாதங்கள் முதல் 1 வருடம் வரை | 4.75% |
300 நாட்கள் சிறப்பு டெபாசிட் | 7.05% |
ஓராண்டு டெபாசிட் | 6.10% |
400 நாள்கள் சிறப்பு டெபாசிட் | 7.25% |
1 வருடத்திற்கு மேல் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது | 7.1% |
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை | 6.7% |
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை | 6.25% |
5 ஆண்டு | 6.25% |
5 ஆண்டுக்கு மேல் | 6.10% |
வைப்புத்தொகை குறைந்தபட்சம் 181 நாட்களுக்குத் தக்கவைக்கப்பட்டிருந்தால், டெபாசிட்களை மூடுவதற்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது, அதாவது, டெபாசிட் தேதியில் நடைமுறையில் இருக்கும் உண்மையான காலகட்டத்திற்கு பொருந்தக்கூடிய வட்டி விகிதம் பொருந்தும். 181 நாட்களுக்கு முன் மூடப்பட்ட டெபாசிட்டுகளுக்கு, நடைமுறையில் இருக்கும் பொருந்தக்கூடிய வட்டி விகிதங்கள் அளிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.