/indian-express-tamil/media/media_files/CScD5OoEHHgXFKPMlzvN.jpg)
ஜனவரி 31, 2024 நிலவரப்படி, நிர்வாகத்தின் கீழ் உள்ள நிதியின் தற்போதைய சொத்துகள் (AUM) ரூ. 7,424.61 கோடியாக உள்ளது.
Mutual Fund |கோடக் ப்ளூசிப் ஃபண்ட் (Kotak Bluechip Fund) 1998ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கப்பட்டதில் இருந்து மாதாந்திர முதலீட்டாளர்களுக்கு 16.36% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகித (CAGR) வருமானத்தை வழங்கி வருகிறது.
இந்த ஃபண்டில் கடந்த 25 ஆண்டுகளில் எஸ்ஐபி மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 முதலீடு செய்தவர்களுக்கு ஜனவரி 31, 2024 நிலவரப்படி ரூ.3.50 கோடிக்கு மேல் கார்பஸாக உருவாகியுள்ளது.
கோடக் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நிதியானது அவர்களின் வலுவான வணிக அடிப்படைகள் மற்றும் திறமையான மேலாண்மை குழுக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இது புளூ-சிப் நிறுவனங்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இந்த நிதியை சிறந்த தேர்வாக மாற்றுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, மாருதி சுஸுகி, டிசிஎஸ், அல்ட்ராடெக் சிமென்ட் போன்ற பங்குகளை தற்போது வைத்திருப்பதாக காட்டுகிறது.
இது குறித்து, கோடக் மஹிந்திரா ஏஎம்சியின் நிர்வாக இயக்குநர் நிலேஷ் ஷா கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளில், இந்தியாவின் நிலப்பரப்பு குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு பொருளாதார சுழற்சியிலும், அரசியல் கட்டத்திலும், அடிப்படை மாற்றத்திலும், கோடக் புளூசிப் நிதி இந்தியாவின் வளர்ச்சிக் கதையைப் பிரதிபலித்தது” என்றார்.
ஜனவரி 31, 2024 நிலவரப்படி, நிர்வாகத்தின் கீழ் உள்ள நிதியின் தற்போதைய சொத்துகள் (AUM) ரூ. 7,424.61 கோடியாக உள்ளது. துறைவாரியாக, கோடக் புளூசிப் ஃபண்ட் நிதிச் சேவைகளுக்கு அதிகபட்சமாக 25.03% வெயிட்டேஜை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.