LIC Saral Pension Scheme | மாதம் ரூ.12 ஆயிரம் வரை ஓய்வூதியம் (பென்ஷன்) வழங்கும் எல்.ஐ.சி திட்டம் குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டம் மிக எளிய முறையில் கிடைக்கிறது.
எல்.ஐ.சி. சரல் பென்ஷன் திட்டம் பாலிசியின் தொடக்கத்தில் வருடாந்திர விகிதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
சமீப ஆண்டுகளாக, போட்டி ஊதியம் காரணமாக தனியார் துறை வேலைகளின்மீது ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு பெரும்பாலும் ஓய்வூதிய பலன்கள் இல்லை.
ஓய்வூதிய பாதுகாப்பினை உணர்ந்து, எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் தனிநபர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடலுக்கான நம்பகத்தன்மையை வழங்குகின்றன.
எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டம்
எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டம் என்பது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதல்களின்படி செயல்படும் ஒரு நிலையான உடனடி வருடாந்திரத் திட்டமாகும்.
இந்தத் திட்டம் பாலிசியின் தொடக்கத்தில் வருடாந்திர விகிதங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. மேலும், வருடாந்திர தொகையை வருடாந்திரம் பெறுபவரின் வாழ்நாள் முழுவதும் வழங்குகிறது.
எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டம் 2 வருடாந்திர தேர்வுகளை வழங்குகிறது.
முதல் வகை I
வாங்கிய விலையில் 100 சதவிகிதம் வருமானத்துடன் கூடிய ஆயுள் ஆண்டுத் தொகை.
இரண்டாம் வகை II
ஜாயின்ட் லைஃப் லாஸ்ட் சர்வைவர் ஆன்யூட்டியுடன், கடைசியாக உயிர் பிழைத்தவரின் மரணத்தின் போது வாங்கிய தொகையில் 100 சதவிகிதம், திருமணமான பாலிசிதாரர்களுக்குக் கிடைக்கும்.
எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற தேவையான தகுதிகள்
வயது வரம்பு
பாலிசிதாரர் 40 முதல் 80 வயதுக்குள் இருக்க வேண்டும். பாலிசியில் அதிகபட்ச வரம்பு இல்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட முறையை பொறுத்து, குறைந்தபட்ச வருடாந்திரத் தொகைகள் மாதத்திற்கு ரூ.1,000 முதல் ஆண்டுக்கு ரூ.12,000 வரை இருக்கும்.
எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. வருடாந்திர கொடுப்பனவுகளின் அடிப்படையில் ஊக்கத்தொகை மாறுபடும்.
எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டம் தனிநபர்களுக்கு நடைமுறை ஓய்வூதியத் திட்டமிடல் தீர்வை வழங்குகிறது. இது பி.எஃப் மற்றும் ஓய்வூதியத்தின் போது பெறப்பட்ட கிராச்சுட்டி தொகை உட்பட மொத்த முதலீடுகள் மூலம் வருடம் முழுவதும் பெற அனுமதிக்கிறது.
எல்ஐசி கால்குலேட்டரின் படி, 42 வயது நிரம்பியவர் ரூ. 30 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக ரூ. 12 ஆயிரத்து 388 கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“