மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) என்பது ஒரு அஞ்சல் அலுவலகம், உத்தரவாதமான வருமானம் வழங்கும் திட்டமாகும், இது பெண்கள் தங்கள் பணத்தை சிறிய விகிதத்தில் சேமிக்கவும் முதலீடு செய்யவும் ஊக்குவிக்கிறது.
இந்தத் திட்டத்தில், ஒரு பெண் இரண்டு வருட காலத்திற்கு இத்திட்டத்தில் ஒரே நேரத்தில் ரூ.1000 மற்றும் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
இந்தத் திட்டத்தில், 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். இதில், ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்ட கால்குலேட்டரின் படி, நீங்கள் ரூ. 50,000 அஞ்சலக திட்டத்தில் முதலீடு செய்தால், இரண்டு ஆண்டுகளில் அதன் வட்டியாக ரூ.8,011 கிடைக்கும்,
இதனால், முதிர்வுத் தொகை ரூ.58,011 ஆக இருக்கும். இந்தத் திட்டத்தில், ரூ.1,00,000 முதலீடு செய்தால், 7.5 சதவீத வட்டி விகிதத்தில், முதிர்வு காலத்தில் ரூ.1,16,022 கிடைக்கும்.
அதேசமயம், ரூ.1,50,000 டெபாசிட் செய்தால், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1,74,033 கிடைக்கும், அதில் ரூ.24,033 வட்டிப் பணமாக இருக்கும்.
ரூ.2,00,000 முதலீட்டில், ரூ.32,044 வட்டியாகப் பெறுவீர்கள், மேலும் உங்கள் முதிர்வுத் தொகை ரூ.2,32,044 ஆக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“