எஃப்.டி-க்கு 9.1 சதவீதம் வட்டி; மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க!
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். வழக்கமான FDகளுடன் ஒப்பிடும்போது, மூத்த குடிமக்கள் பொதுவாக தங்கள் FDகளுக்கு 0.50% கூடுதல் வட்டியைப் பெறுவார்கள்.
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகளுக்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம். வழக்கமான FDகளுடன் ஒப்பிடும்போது, மூத்த குடிமக்கள் பொதுவாக தங்கள் FDகளுக்கு 0.50% கூடுதல் வட்டியைப் பெறுவார்கள்.
SBI, HDFC வங்கி மற்றும் கோடக் வங்கி உள்ளிட்ட 10 வங்கிகளின் பட்டியல் உள்ளன.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
மூத்த குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் என்பது 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதலீட்டு திட்டம் ஆகும். இந்தத் திட்டம் மூத்தக் குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் அவற்றில் முதலீடு செய்யும் போது பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்வது அவசியம். முதலாவதாக, மூத்த குடிமக்கள் நிலையான வைப்புத்தொகையின் வருமானத்தை தீர்மானிப்பதில் வட்டி விகிதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Advertisment
பொதுவாக, இந்த வைப்புத்தொகைகள் வழக்கமான நிலையான வைப்புத்தொகைகளுடன் ஒப்பிடும்போது அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகின்றன. இருப்பினும், நடைமுறையில் உள்ள வட்டி விகிதங்களைப் புதுப்பித்துக்கொள்வது இன்றியமையாதது.
மூத்தக் குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்
எண்
வங்கி
வட்டி (%)
காலம்
01
சூர்யதோய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
9.10
2 ஆண்டு 1 நாள்
02
டிபிஎஸ் வங்கி
8
376 நாள்கள் முதல் 540 நாள்கள் வரை
03
டோய்சூ வங்கி (deutsche bank)
8
1 ஆண்டு முதல் 1.5 ஆண்டுகள்
04
பெடரல் வங்கி
8
500 நாள்கள்
05
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா
7.85
444 நாள்கள்
06
ஹெசடிஎஃப்சி வங்கி
7.65
35 மாதங்கள்
07
பேங்க் ஆஃப் பரோடா
7.65
400 நாள்கள்
08
இந்தியன் வங்கி
7.75
400 நாள்கள்
09
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
7.50
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்குள்
10
கோடக் வங்கி
7.80
23 மாதங்கள்
Advertisment
Advertisements
முதலீட்டு உத்தியை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து மறுமதிப்பீடு செய்வது அவசியம். பொருளாதார நிலைமைகள் மற்றும் வட்டி விகித சூழ்நிலைகள் மாறலாம், நிலையான வைப்புகளின் செயல்திறனை பாதிக்கலாம்.
முதலீட்டு போர்ட்ஃபோலியோவைத் தொடர்ந்து கண்காணித்து, சரிசெய்தல்களைச் செய்வது மூத்த குடிமக்கள் வருமானத்தை மேம்படுத்தவும், ஓய்வுக்குப் பிறகு அவர்களின் நிதி நலனைப் பாதுகாக்கவும் உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“