Post Office Savings Scheme | நிதிப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தேடலில், தனிநபர்கள் பெரும்பாலும் தபால் அலுவலகம் வழங்கும் பல்வேறு சேமிப்புத் திட்டங்களுக்ளை விரும்புகின்றனர்.
இந்தத் திட்டங்கள் ஒரு தொகையை சேமிக்க பயன்படுகின்றன. அதேசமயம், இத்திட்டங்களுக்கு வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரி-சேமிப்புப் பலன்கள் கிடைக்கின்றன.
மேலும், இந்தத் திட்டங்களில் உள்ள நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது, முதலீடுகள், வட்டிக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம்.
அந்த வகையில், பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளை வழங்காத 5 அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் விவரங்களைப் பார்ப்போம்.
1) ஆர்.டி.
ஆர்.டி. உத்தரவாதமான வருமானம் தேடும் தனிநபர்களுக்கு ஏற்றது. இந்தத் திட்டம், 5 ஆண்டு லாக்-இன் காலத்துடன் வருகிறது. எனினும், பிரிவு 80C இன் கீழ் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய வரிச் சலுகைகள் எதுவும் இல்லை என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும். சம்பாதித்த வட்டி வரிவிதிப்புக்கு உட்பட்டது.
2) தேசிய சேமிப்பு டைம் டெபாசிட்
நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் டெபாசிட் காலத்தின் அடிப்படையில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. அதே வேளையில், ஐந்தாண்டு லாக்-இன் காலத்துடன் கூடிய டெபாசிட்டுகளுக்கு மட்டுமே வரிச் சலுகைகள் கிடைக்கும்.
குறுகிய கால டெபாசிட்டுகள் பிரிவு 80C விதிவிலக்குகளுக்கு தகுதி பெறாது. 6.9% முதல் 7.1% வரையிலான வட்டி விகிதங்கள் வைப்பு காலத்தைப் பொறுத்து வழங்கப்படும்.
3) போஸ்ட் ஆபிஸ் மாதாந்திர சேமிப்பு
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டத்தை குறைந்தப்பட்சம் ரூ.1500 முதலீட்டில் தொடங்கலாம். மேலும், திட்டத்தில் அதிகப்பட்ச முதலீடு ரூ.9 லட்சம் ஆகும், கூட்டுக் கணக்குக்கான அதிகப்பட்ச முதலீடு ரூ.15 லட்சம் ஆகும். இந்தத் திட்டத்தில், சம்பாதித்த வட்டி வரிக்கு உள்பட்டது.
4) மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் பெண்கள் அதிகாரமளிப்பதை இலக்காகக் கொண்டு சேமிப்புக் கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், வரி சேமிப்பு நிலையான வைப்புகளைப் போலன்றி, எந்த வரிச் சலுகைகளையும் கிடையாது.
5) கிஷான் விகாஸ் பத்ரா
கிசான் விகாஸ் பத்ரா 80C வரி விலக்குகளை வழங்கவில்லை. இந்தத் திட்டத்தின் வருமானம் முழு வரிக்கு உட்பட்டது. முதலீட்டாளர்கள் கே.வி.பி.யில் முதலீடு செய்தால் அந்தப் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“