எஸ்.பி.ஐ சர்வோத்தம் ஃபிக்ஸட் டெபாசிட்: புதிய வட்டி விகிதம் என்ன தெரியுமா?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சர்வோத்தம் எஃப்.டி திட்டத்தில், ஓராண்டு டெபாசிட்டுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படும். மூத்தக் குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி வழங்கப்படும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் சர்வோத்தம் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்தும், டெபாசிட்டின் கால அளவு குறித்தும் இதில் பார்க்கலாம். இந்தப் ஃபிக்ஸட் டெபாசிட்டின் புதிய வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலில் உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த ஆண்டு சர்வோத்தம் ஃபிக்ஸட் டெபாசிட்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த டெபாசிட் திட்டங்களில் 2 ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
Advertisment
ஓராண்டு டெபாசிட் திட்டத்துக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படும். மூத்தக் குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிக வட்டி வழங்கப்படும். அதாவது அவர்கள், 2 ஆண்டுகால டெபாசிட்டுக்கு 7.90 சதவீதம் வட்டி பெறுவார்கள். அதேநேரத்தில் ஓராண்டு கால டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் 7.60 சதவீதம் ஆக காணப்படும். இந்த நிலையில் எஸ்.பி.ஐ வங்கியின் மற்ற வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.
டெபாசிட் காலம்
வட்டி விகிதம் (பொது)
மூத்தக் குடிமக்கள்
7 நாள்கள் முதல் 45 நாள்கள்
3.5%
4.00%
46 நாள்கள் முதல் 179 நாள்கள்
5.5%
6.00%
180 நாள்கள் முதல் 210 நாள்கள்
6.00%
6.50%
211 நாள்கள் முதல் 1 ஆண்டுக்குள்
6.25%
6.75%
1 ஆண்டு முதல் 2 ஆண்டு
6.8%
7.30%
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்குள்
7.00%
7.50%
3 ஆண்டு முதல் 5 ஆண்டுக்குள்
6.75%
7.25%
5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள்
6.5%
7.00%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“