Fixed Deposits | இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. பொதுவாக இந்த முதலீடுகள் உத்தரவாதமான வருவாயை உறுதி செய்கின்றன.
மேலும், வருமான வரி நன்மைகளையும் தருகின்றன. தற்போது, பல வங்கிகள், சிறு நிதி வங்கிகளுடன் சேர்ந்து, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அந்த வகைகளில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ (ICICI) வங்கி 3.00% முதல் 7.20% வரையிலான வட்டி விகிதங்களுடன் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டை வழங்குகிறது. இதில் மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக வட்டி விகிதங்கள் வழங்கப்படும். ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் காலம் 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC) ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பிப்.9,2024ஆம் ஆண்டு முதல் திருத்தியது. இந்தப் புதிய வட்டி விகிதங்களின்படி, 3 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை டெபாசிட்களுக்கு வட்டி வழங்கப்படுகிறது. மூத்தக் குடிமக்கள் கூடுதலாக வட்டி விகிதங்கள் பெறுவார்கள்.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, இது வழக்கமான நுகர்வோருக்கு 4.5% முதல் 9% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.5% முதல் 9.5% வரை வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள்.
டெபாசிட் வட்டி விகிதம் 3 பிப்ரவரி 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. 1001 நாட்கள் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், ரூ.10,000க்கும் குறைவான வைப்புத் தொகையுடன் நீங்கள் விரும்பும் டெபாசிட் காலத்தைத் தேர்வுசெய்யலாம்.
ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு உண்டு. இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரியை தொடர்புக் கொண்டு விவரங்களை அறிந்துக் கொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“