Sbi Fixed Deposit | ஃபிக்ஸட் டெபாசிட் சந்தை-இணைக்கப்பட்ட முதலீடுகளுக்கு மாறாக, மூலதனப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த அம்சம் மூத்த குடிமக்கள் மற்றும் ஆபத்து இல்லாத முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு விருப்பமானதாக உள்ளது.
மேலும், தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் கவர்ச்சிகரமானதாக உள்ளன. இதனால் இதில் முதலீடு செய்ய பலரும் விரும்புகின்றனர்.
ரெப்போ வட்டி விகிதம்
இன்று, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் 2025ஆம் நிதியாண்டின் முதல் பணவியல் கொள்கையை அறிவித்தார். அதன்படி ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வருங்காலத்தில் எஃப்.டி திட்டங்களின் வட்டி விகிதம் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது ரெப்போ வட்டி விகிதம் மாறாமல் 6.5 சதவீதம் ஆக உள்ளது. FY25க்கான GDP வளர்ச்சி கணிப்பு 7% ஆக உள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதலீடு
அந்த வகையில் தற்போது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சம் தொகை இரண்டு ஆண்டுகளில் ரூ.1.15 லட்சமாக முதிர்ச்சி அடையும்.
வரி விலக்கு உண்டா?
ஃபிக்ஸட் டெபாசிட் (FD) மூலம் நீங்கள் சம்பாதிக்கும் வட்டி வருமானம் முழுமையாக வரிக்கு உட்பட்டது. வட்டி வருவாய் உங்கள் மொத்த வரிப் பொறுப்பின் ஒரு பகுதியாகும்.
எஃப்.டி-யில் பெறப்படும் வட்டியானது "பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம்" எனக் கருதப்படுவதால், மூலத்தில் கழிக்கப்பட்ட வரி அல்லது TDS பயன்படுத்தப்படுகிறது.
வட்டி வருவாயுடன் உங்கள் வங்கி உங்கள் கணக்கில் வரவு வைக்கும் நேரத்தில் TDS கழிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“