fixed-deposits | axis-bank | punjab-national-bank | நாட்டின் பிரதான வங்கிகள், முதலீட்டாளர்களுக்கு சிறந்த விருப்பங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இம்மாதத்தில் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.
அந்த வகையில், ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி மற்றும் இண்டஸ்இந்த் வங்கி (IndusInd) ஆகியவை தங்கள் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), திருத்தத்திற்குப் பிறகு, பொது மக்களுக்கு ஆண்டுக்கு 3.50% முதல் 7.25% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 4.00% முதல் 7.75% வரையிலும் எஃப்.டி வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள், பிப்ரவரி 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அவகாசம் திட்டங்களுக்கும் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.
இண்டஸ்இந்த் வங்கி
இண்டஸ்இந்த் வங்கி (IndusInd) பிப்ரவரி 6, 2024 முதல் திருத்தப்பட்ட எஃப்.டி வட்டி விகிதங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 3.50% முதல் 7.75% வரை இருக்கும்.
மூத்தக் குடிமக்களும் ஆண்டுக்கு 4.00% முதல் 8.25% வரையிலான விகிதங்களிலிருந்து பயனடையலாம்.
ஆக்சிஸ் வங்கி
ஆக்ஸிஸ் வங்கி பிப்ரவரி 5, 2024 முதல் அதன் எஃப்.டி வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. வங்கி தற்போது 3.50% முதல் 7.20% வரையிலான வட்டி விகிதங்களை பொது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்குகிறது.
இந்த நிலையில், 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான வரையிலான தவணைக்காலங்களுக்கான விகிதங்களில் 10 அடிப்படைப் புள்ளிகள் அதிகரிப்பு காணப்படுகிறது, இது 7.20% ஆக உள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி அதன் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ₹2 கோடி முதல் ₹5 கோடி வரை திருத்தியுள்ளது. இது, பிப்ரவரி 3, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய விகிதத்தின்படி, வழக்கமான குடிமக்களுக்கான வட்டி விகிதங்கள் 4.75% முதல் 7.40% வரை இருக்கும். மூத்தக் குடிமக்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி கிடைக்கும். அதிகபட்ச விகிதங்கள் 7.90% ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“