5 ஆண்டு டெபாசிட், 7% வட்டி: டாப் 6 வங்கிகள் லிஸ்ட்!
5 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பெஸ்ட் ரிட்டன் கொடுக்கும் டாப் 5 இந்திய வங்கிகள் குறித்து இங்கு பார்க்கலாம். எஃப்.டி வட்டி விகிதங்கள் பொதுவாக காலம், வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடும்.
Fixed Deposits | ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள், முதலீட்டாளர்களுக்கான முக்கிய உந்துதல்களில் ஒன்று ஆகும். எனினும், இதன் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மட்டுமல்ல, டெபாசிட் காலத்துக்கு ஏற்பவும் மாறுபடும். எடுத்துக்காட்டாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) ஃபிக்ஸட் டெபாசிட் செய்யும் போது, மூன்று மாத எஃப்.டிக்கு 5.5 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும். இதே வட்டி விகிதங்கள் ஓராண்டாக இருக்கும்போது 6.8 சதவீதமாக அதிகரிக்கும்.
Advertisment
வங்கி
5 ஆண்டுகால எஃப்.டி வட்டி விகிதம் (%)
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
6.50%
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
7.00%
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
7.00%
பேங்க் ஆஃப் பரோடா
6.50%
கோடக் மகிந்திரா வங்கி
6.20%
பஞ்சாப் நேஷனல் வங்கி
6.55%
வங்கிகளின் வட்டி விகிதம்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் அதன் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியது. புதிய வட்டி விகிதங்கள் மே 15, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. 5 ஆண்டுகால எஃப்.டிக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி 5 ஆண்டுகால எஃப்.டிக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. புதிய வட்டி விகிதங்கள் பிப்.17ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. பேங்க் ஆஃப் பரேடாவை பொறுத்தவரை 2024 ஜன.15ஆம் தேதியில் இருந்து 5 ஆண்டுகால எஃப்.டிக்கு 6.50 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
மற்றொரு தனியார் துறை வங்கியான ஹெச்.டி.எஃப்.சி 5 ஆண்டுகால டெபாசிட்டுக்கு 7 சதவீதம் வரை வட்டியை 2024 பிப்ரவரி 9ஆம் தேதி முதல் வழங்குகிறது. ஓராண்டு டெபாசிட்டுக்கு 6.6 சதவீதம் வட்டி வழங்கப்படும். தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கியை பொறுத்தவரை 5 ஆண்டு டெபாசிட்டுக்கு 6.55 சதவீத வட்டியும், கோடக் மகிந்திரா வங்கியை பொறுத்தவரை 6.20 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“