எல்.ஐ.சி கன்யாதன் திட்டம் : எல்.ஐ.சி கன்யாதன் திட்டம் ஒரு மகளின் எதிர்காலத்திற்கான நிதி திட்டமிடலுக்கு கணிசமான பலன்களை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.3,447 வீதம் முதலீடு செய்தால் 22 ஆண்டுகளில் ரூ.22.50 லட்சத்தை திரட்ட முடியும்.
மேலும், எல்.ஐ.சி கன்யாதன் திட்டத்தில் வரி விலக்குகள், கடன் வசதி, ஆயுள் காப்பீடு மற்றும் தந்தையின் மரணம் ஏற்பட்டால் பிரீமியம் தள்ளுபடி ஆகியவை உள்ளன. அதாவது, செலுத்திய பிரீமியங்களுக்கு பிரிவு 80C மற்றும் முதிர்வு பலன்களுக்கு பிரிவு 10D இன் கீழ் வரி விலக்குகள் கிடைக்கும்.
பெற்றோர் தங்கள் மகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகப் பிறந்ததிலிருந்தே நிதித் திட்டமிடலைத் தொடங்குவது சிறந்தது. இந்தத் திட்டத்தில் பிரீமியங்களை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் செலுத்தலாம்.
மேலும், பாலிசியின் மூன்றாம் ஆண்டு முதல் கடன் வசதி கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை ஒப்படைப்பதற்கான விருப்பம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில், தந்தையின் விபத்து மரணம் ஏற்பட்டால், நாமினிக்கு கூடுதலாக ரூ.10 லட்சம் கிடைக்கும். மேலும், பாலிசி காலத்தின் போது தந்தை இறந்தால், பிரீமியம் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தொடர்ந்து, பாலிசி காலம் முடியும் வரை மகளுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கிடைக்கும். இது மட்டுமின்றி பாலிசி காலத்தின் போது ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.
இதில், 25 ஆண்டு கால மற்றும் ரூ.41,367 வருடாந்திர பிரீமியத்துடன் கூடிய திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் மாதாந்திர பிரீமியம் தோராயமாக ரூ.3,447 ஆக இருக்கும். நீங்கள் இந்த பிரீமியத்தை 22 வருடங்கள் செலுத்துவீர்கள், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ரூ.22.5 லட்சம் ஆயுள் காப்பீடு இருக்கும்.
பாலிசி காலத்தின் போது பாலிசிதாரர் (தந்தை) இறந்துவிட்டால், மீதமுள்ள காலத்திற்கான பிரீமியத்தை குழந்தை செலுத்த வேண்டியதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. கூடுதலாக, 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசி காலம் முடிவடையும் வரை குழந்தைக்கு ஆண்டுதோறும் ரூ. 1 லட்சமும், காலத்தின் முடிவில் மொத்த முதிர்வுத் தொகையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“