ஓராண்டில் 60% வரை ரிட்டன்: 2024 பெஸ்ட் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்!
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் சந்தையை அடிப்படையாக கொண்டவை. இதில் இடர்பாடுகள் அதிகம் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதில் முதலீடு செய்யும் முன்..
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நீண்ட கால வளர்ச்சி மற்றும் பல்வகைப்படுத்தலைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்கும். பொதுவாக இந்தத் திட்டங்கள் வருமானம் அடிப்படையில் முதலீட்டாளர்களின் தேர்வாக இருக்கும். எனினும், இதில் பல்வேறு அடிப்படை காரணிகளும் உள்ளன.
Advertisment
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட்கள்
வ.எண்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
ஓராண்டு ரிட்டன் (%)
01
குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்ட்
49.24
02
ஜேஎம் லார்ஜ் கேப் ஃபண்ட்
38.25
03
பேங்க் ஆஃப் இந்தியா புளூசிப் ஃபண்ட்
39.10
04
டாரஸ் லார்ஜ் கேப் ஃபண்ட்
36.72
05
நிப்பான் இந்தியா லார்ஜ் கேப் ஃபண்ட்
36.10
மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், வலுவான வளர்ச்சித் திறன் கொண்ட நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்வதால், போர்ட்ஃபோலியோக்களை பல்வகைப்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.
மிட்கேப் ஃபண்ட்கள்
வ.எண்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
ஓராண்டு ரிட்டன் (%)
01
குவாண்ட் மிட் கேப் ஃபண்ட்
60.24
02
மஹிந்திரா மேனுலைஃப் மிட் கேப் ஃபண்ட்
58.59
03
ஜேஎம் மிட்கேப் ஃபண்ட்
57.90
04
HDFC மிட்-கேப் வாய்ப்புகள் நிதி
53.75
05
எச்எஸ்பிசி மிட்கேப் ஃபண்ட்
50.64
மதிப்பு நிதி பரஸ்பர நிதி திட்டங்கள் மதிப்பு முதலீட்டு உத்தியைப் பயன்படுத்துகின்றன. அவற்றின் சொத்துகளில் குறைந்தது 65 சதவீதத்தை பங்குகளுக்கு ஒதுக்குகின்றன.
மதிப்பு நிதி பரஸ்பர நிதி திட்டங்கள்
வ.எண்
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்
ஓராண்டு ரிட்டன் (%)
01
குவாண்ட் மதிப்பு நிதி
65.44
02
ஜேஎம் மதிப்பு நிதி
59.08
03
ABSL தூய மதிப்பு நிதி
54.43
04
நிப்பான் இந்தியா மதிப்பு நிதி
54.11
05
HSBC மதிப்பு நிதி
50.03
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் சந்தையை அடிப்படையாக கொண்டவை. இதில் இடர்பாடுகள் அதிகம் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதில் முதலீடு செய்யும் முன், இதில் உள்ள சாதக- பாதக அம்சங்கள் குறித்து அறிந்து கொள்வதும் அவசியம்.
மேலும், பொதுவாக மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மியூச்சுவல் ஃபண்ட்கள் நல்ல வருமானத்தை அளிக்கின்றன. இதனால் வருமானத்தின் அடிப்படையில் இதில் முதலீடு செய்யும் நபர்கள் அதிகமாக உள்ளனர். கடந்த காலங்களில் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சந்தை நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதனை, புள்ளிவிவர அறிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“