78 சதவீதம் வரை ரிட்டன்: சிறந்த ஸ்மால்கேப் ஃபண்டுகள் தெரியுமா?
கடந்த ஓராண்டில் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் 78.10 சதவீதம் வரை வருமானம் அளித்துள்ளன. லார்ஜ் கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஸ்மால் கேப் ஃபண்டுகள் ரிஸ்க் அதிகம் கொண்டவை.
Mutual Fund | மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு தொழில்முறை நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படும் பணத்தின் தொகுப்பாகும். இது ஒரு பொதுவான முதலீட்டு நோக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் பல முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைச் சேகரிக்கும் ஒரு அமைப்பாகும். இந்த நிதி அமைப்பு, பங்குகள், பத்திரங்கள், பணச் சந்தை கருவிகள் மற்றும்/அல்லது பிற பத்திரங்களில் முதலீடு செய்கிறது.
Advertisment
தற்போது நாம் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
வ.எண்
மியூச்சுவல் ஃபண்டு
ரிட்டன் (%)
01
பந்தன் ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டு
78.10%
02
மகிந்திரா மேனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்டு
73.45%
03
குவாண்ட் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு
72.10%
04
ஐ.டி.ஐ ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டு
70.18%
ஸ்மால் கேப் ஃபண்டுகளில் பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் 78.10% வருமானத்தை ஈட்டியுள்ளது. அதேபோல், ஹிந்திரா மானுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் 73.45% வருவாயை கொடுத்துள்ளது. மேலும், குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 72.10% வழங்கியது, மற்றும் ஐடிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் 70.18% வருமானத்தை அளித்தது.
சிறந்த ஃப்ளக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்
ப்ளக்ஸி கேப் ஃபணடுகளில், ஜே.எம் ஃப்ளக்ஸி கேப் ஃபண்டு (JM Flexicap Fund) 65.92% வருமானத்தையும், பேங்க் ஆஃப் இந்தியா ஃப்ளக்ஸி கேப் ஃபண்டு (Bank of India Flexi Cap Fund) 63.93%ஐயும், குவாண்ட் ஃப்ளக்ஸி கேப் ஃபண்டு (Quant Flexi Cap Fund) 60.49% வருமானத்தையும் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“