இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட் (FD) மிகவும் பிரபலமான சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி.கள் வெவ்வேறு கால அளவுகள் மற்றும் தொகைகளுக்கு ஏற்ப வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அந்த வகையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பேங்க் ஆஃப் பரோடா (BoB), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி 15 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் வங்கி அதிகபட்ச வட்டி விகிதத்தை 7.20 சதவீதமாக வழங்குகிறது. அதன் 1 ஆண்டு திட்டத்தில் 6.70 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு எஃப்டிகளுக்கு 7.00 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி 17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவான திட்டத்தில் ஆண்டுதோறும் 7.20 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது.
வங்கியின் 1 ஆண்டு திட்டத்திற்கு 6.70 சதவீதம், 2 ஆண்டு திட்டத்திற்கு 7.10 சதவீதம், 5 ஆண்டு எஃப்டிக்கு 7.00 சதவீதம் வட்டி விகிதம் வழங்குகிறது
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) 400 நாள் அமிர்த் கலாஷ் திட்டத்தில் அதன் அதிகபட்ச எஃப்டி வட்டி விகிதம் 7.10 சதவீதமாக வழங்குகிறது.
ஒரு ஆண்டு எஃப்.டி.க்கான வட்டி விகிதம் 6.80 சதவீதம். 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு எஃப்.டி.களுக்கான வட்டி விகிதம் முறையே 6.75 சதவீதம் மற்றும் 6.50 சதவீதம் ஆகும்.
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
சந்தை மதிப்பின் அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. 18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவான திட்டத்தில் அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.25 சதவீதத்தை வழங்குகிறது.
வங்கியின் 1 ஆண்டு திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.60 சதவீதம். 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு திட்டங்களுக்கான வட்டி விகிதம் தலா 7.00 சதவீதம் ஆகும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாள் திட்டத்தில் அதிகபட்ச வட்டி விகிதம் 7.30 சதவீதமாக வழங்குகிறது. ஒரு ஆண்டு திட்டத்தில் 6.90 சதவீத வட்டி விகிதம் வழங்குகிறது. 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு எஃப்.டி.களுக்கான விகிதங்கள் ஒவ்வொன்றும் 6.50 சதவீதம் ஆகும்.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான எஃப்.டி.க்கு அதிகபட்ச வட்டி விகிதத்தை 7.25 சதவீதம் வழங்குகிறது.
ஒரு ஆண்டு எஃப்.டி. க்கு 6.85 சதவீத வட்டி விகிதம் உள்ளது. அதே நேரத்தில் அதன் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு எஃப்.டி.களுக்கான விகிதங்கள் முறையே 7.25 சதவீதம் மற்றும் 6.50 சதவீதம் ஆகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 400 நாள் எஃப்டி-க்கான அதிகபட்ச வட்டி விகிதத்ம் 7.25 சதவீதமாக உள்ளது. ஒரு ஆண்டு எஃப்.டி.க்கான வட்டி விகிதம் 6.75 சதவீதமாக உள்ளது. 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டுகளுக்கான எஃப்.டி.களுக்கு முறையே 7.00 சதவீதம் மற்றும் 6.50 சதவீதம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“