ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு எந்த பேங்கில் பெஸ்ட் ரிட்டன்? 10 வங்கிகளின் லிஸ்ட்!
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு உண்டு என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு உண்டு என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
10 வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் தெரியுமா?
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
இந்தியர்களிடையை பிரபலமாக முதலீட்டு திட்டமாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் முதலீடுகளை பொதுத்துறை, தனியார் மற்றும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளும் ஈர்க்கின்றன. இதில் பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடுகையில் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் அதிக வட்டியை கொடுக்கின்றன. எனினும் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு மட்டுமே இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு உண்டு என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Advertisment
அந்த வகையில், வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.
வ.எண்
வங்கி
அதிகப்பட்ச வட்டி விகிதம் (%)
01
பேங்க் ஆஃப் இந்தியா
7.25%
02
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
7.10%
03
கனரா வங்கி
7.25%
04
சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா
7.25%
05
இந்தியன் வங்கி
7.25%
06
இந்தியன் ஒவர்சீஸ் வங்கி
7.30%
07
பஞ்சாப் நேஷனல் வங்கி
7.25%
08
பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி
7.25%
09
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
7.10%
10
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
7.25%
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
Advertisment
Advertisements
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது 444 நாள்களுக்கு 7.3% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், வங்கி 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 6.9% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டு கால வைப்புகளுக்கு 6.5% வீதம் வட்டி வழங்கப்படும்.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 7.25% என்ற அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. வங்கியானது 1 வருட நிலையான வைப்புகளுக்கு 6.85% வட்டி விகிதத்தையும், 3 வருட காலத்திற்கு 7.25% வட்டி விகிதத்தையும், 5 வருட எஃப்.டி.களுக்கு 6.5% வட்டியையும் வழங்குகிறது.
பேங்க் ஆஃப் இந்தியா
பேங்க் ஆஃப் இந்தியா 2 வருட காலத்திற்கான எஃப்.டிக்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது. 3 வருட டெபாசிட்களுக்கு 6.5% வட்டி விகிதத்தையும், 5 வருட நிலையான வைப்புகளுக்கு 6% வீதத்தை வழங்குகிறது.
கனரா வங்கி
கனரா வங்கி அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.25%, 444 நாட்களுக்கு வழங்குகிறது. தொடர்ந்து, 1 ஆண்டு நிலையான வைப்புகளுக்கு 6.85%, 3 ஆண்டு எஃப்.டி-களுக்கு 6.8% மற்றும் 5 ஆண்டு நிலையான வைப்புகளுக்கு 6.7% வட்டியை வழங்குகிறது.
சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7.25 சதவீத வட்டி விகிதத்தை 555 நாள்களுக்கு வழங்குகிறது. வங்கி 1 வருட நிலையான வைப்புகளுக்கு சாதகமான 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டு நிலையான வைப்புகளில் 6.5% மற்றும் 5 ஆண்டு நிலையான வைப்புகளில் 6.25% என்ற வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கி பல்வேறு முதலீட்டு விருப்பங்களுக்கு பல்வேறு நிலையான வைப்பு வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதன் "IND SUPER" திட்டமானது 400 நாட்களுக்கு 7.25% என்ற கவர்ச்சிகரமான அதிகபட்ச வட்டி விகிதத்தை வழங்குகிறது. தொடர்ந்து, 1 ஆண்டு நிலையான வைப்புத்தொகைக்கு 6.1% வட்டி விகிதத்தையும் 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு 6.25% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.25%, 400 நாட்களுக்கு வழங்குகிறது. 1 வருட நிலையான வைப்புகளுக்கு 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. வங்கியின் வட்டி விகிதங்கள் 3 ஆண்டு நிலையான வைப்புகளுக்கு 7% ஆகவும், 5 ஆண்டு எஃப்.டி-க்களுக்கு 6.5% ஆகவும் இருந்தது.
பஞ்சாப் & சிந்து வங்கி
பஞ்சாப் & சிந்து வங்கி அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.25%, 444 நாட்களுக்கு வழங்குகிறது. வங்கி 1 வருட நிலையான வைப்புகளுக்கு போட்டி 6.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு நிலையான வைப்புகளில் அதன் 6% விகிதங்கள் கிடைக்கும்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.25% 399 நாள்களுக்கு வழங்குகிறது. குறுகிய காலத்திற்கு, அதன் விகிதங்கள் 1 ஆண்டு நிலையான வைப்புகளுக்கு 6.75%, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு டெபாசிட்களுக்கு 6.5% ஆகவும் காணப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, "அமிர்த் கலாஷ்" திட்டத்தின் கீழ் 400 நாட்களுக்கு அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.1% வழங்குகிறது. 1 ஆண்டு நிலையான வைப்புத்தொகைக்கு 6.8% வட்டி விகிதத்தையும், 3 ஆண்டு எஃப்.டி-களுக்கு 6.75% மற்றும் 5 ஆண்டு வைப்புகளுக்கு 6.5% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
மகாராஷ்டிரா வங்கி
மகாராஷ்டிரா வங்கி அதன் அதிகபட்ச வட்டி விகிதமான 7.1%, 400 நாள்களுக்கு வழங்குகிறது. வங்கி 1 வருட நிலையான வைப்புகளுக்கு 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு நிலையான வைப்புகளில் அதன் 6.5% விகிதங்கள் கிடைக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“