PPF New interest Rates | பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி.பி.எஃப் (PPF) மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் தனிநபர்கள் ஒரே ஒரு கணக்கை மட்டுமே வைத்திருக்க முடியும். மேலும், பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு ஆபத்து இல்லாதது. ஏனெனில் அரசாங்கம் அதை ஆதரிக்கிறது. வட்டி விகிதங்கள் சாதகமாக உள்ளன. மேலும் பல வரிச் சலுகைகள் வருமான வரிகளைச் சேமிக்க அனுமதிக்கின்றன.
வட்டி விகிதம் என்ன?
இந்திய அரசாங்கம் பி.பி.எஃப் திட்டம் மீதான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது. இது காலாண்டு மாற்றத்திற்கு உட்பட்டது. அந்த வகையில், 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் அறிவித்தது. அதன்படி, அனைத்து திட்டங்களின் விகிதங்களையும் மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்துள்ளது. சமீபத்திய புதுப்பிப்பின்படி, பி.பி.எஃப் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% ஆகும். இது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது.
முழு வரி விலக்கு
மேலும், பி.பி.எஃப் கணக்கின் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில், ஆண்டுக்கு ரூ 500 முதல் ரூ 1.5 லட்சம் வரை சேமிக்கலாம். பொதுவாக பி.பி.எஃப் முழு வருமான வரி விலக்கின் கீழ் வரக் கூடியது ஆகும். இந்தத் திட்டத்தில், அதிகபட்ச விலக்கு வரம்பு ரூ. 1.5 லட்சத்துடன், பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம். PPF வட்டி விலக்கு என்று வரும்போது வருமான வரிச் சட்டத்தின் 10-வது பிரிவுக்கு இணங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“