/tamil-ie/media/media_files/uploads/2023/06/ls-money-2.jpg)
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இரண்டு வருட எஃப்.டி மீதான வட்டி விகிதம் 7.20% ஆகும்.
என்ஆர்ஓ வைப்பில் (குடியுரிமை இல்லாத சாதாரண கணக்கு) என்.ஆர்.ஐ, வெளிநாட்டு மற்றும் இந்திய நாணயத்தில் பணத்தை டெபாசிட் செய்யலாம்.
இந்தக் கணக்கில் இரண்டு வருட கால அவகாசத்துடன் ரூ. 1 கோடி வரையிலான என்ஆர்ஓ டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் முதல் 10 வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
பேங்க் ஆஃப் இந்தியா
இரண்டு வருட எஃப்.டி மீதான வட்டி விகிதம் 7.25% ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,15,454 லட்சமாக வளரும்.
ஐசிஐசிஐ வங்கி
இரண்டு வருட எஃப்.டி மீதான வட்டி விகிதம் 7.20% ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,15,341 லட்சமாக வளரும்.
ஆக்சிஸ் வங்கி
இரண்டு வருட எஃப்.டி மீதான வட்டி விகிதம் 7.10% ஆகும். இதில், இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,15,114 லட்சமாக வளரும்.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி, எஸ்.பி.ஐ
இரண்டு வருட எஃப்.டி மீதான வட்டி விகிதம் 7% ஆகும். இந்த வங்கிகளில், இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்பட்ட ரூ.1 லட்சமானது ரூ.1,14,888 லட்சமாக வளரும்.
பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி
இந்த வங்கிகளில், இரண்டு வருட எஃப்.டி மீதான வட்டி விகிதம் 6.85% ஆகும். இதில், இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,14,550 லட்சமாக வளரும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட் மீதான வட்டி விகிதம் 6.80% ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,14,437 லட்சமாக வளரும்.
இந்தியன் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
இந்த வங்கிகளில், இரண்டு வருட எஃப்.டி மீதான வட்டி விகிதம் 6.50% ஆகும். இதில், இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்படும் ரூ.1 லட்சமானது ரூ.1,13,764 லட்சமாக வளரும்.
ரூ.5 லட்சம் முதலீடுக்கு காப்பீடு
ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) ரூ.5 லட்சம் வரையிலான எஃப்டி டெபாசிட்டுகளில் முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.