போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்: ஒருவர் முதலீட்ட்டில் எந்த விதமான ரிஸ்க் எடுக்காமல், குறுகிய காலத்தில் பெரும் லாபத்தை ஈட்ட விரும்பினால், தபால் அலுவலகத்தில் இதனை தேர்ந்தெடுக்கலாம். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை மக்கள் பொதுவாக போஸ்ட் ஆபிஸ் எஃப்டி என்று அழைக்கிறார்கள்.
இதில், நீங்கள் 5 ஆண்டுகளுக்கு எஃப்.டி செய்ய விரும்பினால், அஞ்சல் அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல வட்டி கிடைக்கும். தற்போது, தபால் அலுவலகத்தின் 5 ஆண்டு எஃப்.டிக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இது தவிர, வருமான வரிச் சட்டம் 80C இன் கீழ் 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்டில் வரிச் சலுகையும் பெறுவீர்கள்.
ரூ.1,34,984 வட்டி பெறுவது எப்படி?
இந்தத் திட்டத்தில் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டு முடிவில் ரூ.1,34,984 வட்டி கிடைக்கும். அதாவது முதிர்ச்சியின்போது ரூ.4 லட்சத்து 34 ஆயிரத்து 984 கிடைக்கும்.
இதுவே ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 7.5 சதவீதம் வட்டியில் ரூ.89,990 வட்டியுடன் ரூ.2,89,990 கிடைக்கும். ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.44,995 வட்டி கிடைக்கும். முதிர்ச்சியின்போது ரூ.1,44,995 கிடைக்கும். மேலும், இந்தத் திட்டத்தில் 1 ஆண்டு, 2 ஆண்டு வாய்ப்புகளும் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“