வருமான வரி சட்டப் பிரிவு 80C முதலீடு செய்ய உங்களை அனுமதிப்பதன் மூலம் உங்கள் வரியை குறைக்கிறது. வரி குறித்து நீங்கள், இன்னும் திட்டமிடலைத் தொடங்கவில்லை என்றால், 2023-24 நிதியாண்டில் வரி சேமிப்பு முதலீடுகளைச் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31 ஆகும்.
ஏற்கனவே பெரும்பாலான முதலாளிகள் தங்கள் முதலீட்டுச் சான்றுகளைச் சமர்ப்பிக்குமாறு ஊழியர்களிடம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
உங்கள் ரிஸ்க் சுயவிவரம் மற்றும் நிதி இலக்குகளைப் பொறுத்து, புத்திசாலித்தனமாக உங்கள் முதலீட்டைத் தேர்ந்தெடுங்கள்.
- உங்கள் விருப்பங்களில்
- பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
- தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)
- சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)
- பங்கு-இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டங்களில் மாதாந்திர SIP (ELSS) முதலீடு
- ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF)
- ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களைச் செலுத்துதல்
ஆகியவை அடங்கும்.
ரிஸ்க் இல்லாத முதலீட்டாளர்கள் மற்றும் குறைந்த வரி அடைப்புக்களில் இருப்பவர்கள் வரி சேமிப்பு நிலையான வைப்புகளை (FDs) பார்க்கலாம்.
இதில், 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்புகளுக்கு மட்டுமே வரி குறைப்பு விகிதங்கள் பரிசீலிக்கப்படும். வட்டியின் காலாண்டு கூட்டுத்தொகையின் அடிப்படையில் மதிப்பு கணக்கிடப்படுகிறது.
வரி-சேமிப்பு FDகளுக்காகக் கருதப்படும் டெர்ம் டெபாசிட் ஹோல்டிங்ஸ் அடிப்படையில் முதல் 10 வங்கிகள் இங்கே உள்ளன.
அந்த வகையில், ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவை வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
தனியார் வங்கிகளில், இந்த வங்கிகள் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் ஐந்தாண்டுகளில் ரூ.2.12 லட்சமாக உயரும்.
கனரா வங்கி வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6.7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. பொதுத்துறை வங்கிகளில், இந்த வங்கி சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் ஐந்தாண்டுகளில் ரூ.2.09 லட்சமாக உயரும். பாங்க் ஆஃப் இந்தியா வரி சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 6 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
இங்கு முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் ஐந்தாண்டுகளில் ரூ.2.02 லட்சமாக உயரும்.
ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) 5 லட்சம் வரையிலான நிலையான வைப்புகளில் முதலீடுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“