ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி 9.10% ஆக உயர்வு; மூத்தக் குடிமக்கள் நோட் பண்ணுங்க!
ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியான உத்கர்ஷ் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் 2024 மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சாதாரண குடிமக்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
Utkarsh Small Finance Bank Fixed Deposits interest rates | உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகையின் (எஃப்டி) வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளது. திருத்தப்பட்ட கட்டணங்கள் மே 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. திருத்தப்பட்ட விகிதங்கள் புதிய நிலையான வைப்புகளுக்கும், ஏற்கனவே உள்ள நிலையான வைப்புகளைப் புதுப்பிப்பதற்கும் பொருந்தும்.
Advertisment
வட்டி விகிதங்கள்
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியானது வழக்கமான குடிமக்களுக்கு ஏழு நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 4% முதல் 8.50% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 8.5% வழங்கப்படுகிறது.
மூத்தக் குடிமக்கள் எஃப்.டி விகிதம்
Advertisment
Advertisements
மூத்த குடிமக்களுக்கு, ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 4.6% முதல் 9.10% வரை மாறுபடும். உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மூத்த குடிமக்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 9.10% அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி எஃப்.டி வட்டி விகிதங்கள்
டெபாசிட் காலம்
வட்டி (%)
மூத்தக் குடிமக்கள் வட்டி (%)
7 முதல் 45 நாள்கள்
4.00
4.60
46 முதல் 90 நாள்கள்
4.75
5.35
91 முதல் 180 நாள்கள்
5.50
6.10
181 முதல் 364 நாள்கள்
6.50
7.10
365 நாள்கள் முதல் 699 நாள்கள்
8.00
8.60
700 நாள்கள் 2 ஆண்டை விட குறைவு
8.25
8.85
2 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை
8.50
9.10
3 ஆண்டு முதல் 4 ஆண்டுக்குள்
8.25
8.85
4 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை
7.75
8.35
5 ஆண்டுக்கு மேல் 10 ஆண்டு வரை
7.25
7.85
அபராதம்
உத்கர்ஷ் எஃப்.டியை காலத்துக்கு முனகூட்டியே மூடினால் அபராதமாக 1 சதவீதம் விதிக்கப்படும். சில நேரங்களில் இதில் சில மாறுதல்கள் இருக்கும். இதனை வங்கி அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்வது நல்லது. பொதுவாக ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகளின் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“