இந்தியாவில் உள்ள தம்பதிகள் தங்கள் நலன்களைப் பாதுகாக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் அத்தியாவசிய நிதி ஆவணங்களை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது.
இந்த ஆவணங்களில் கூட்டு வங்கிக் கணக்கு ஒப்பந்தங்கள், ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் பல உள்ளன.
1) வங்கிக் கூட்டுக் கணக்கு
கூட்டு வங்கிக் கணக்கை தொடங்குவது தம்பதிகளிடையே வலுவான காதலை கொணரும். இந்தக் கணக்கு வீட்டு செலவுகள் மற்றும் நிதி இலக்குகளை தடையின்றி நிர்வகிக்க அனுமதிக்கிறது.
ஆகவே, ஒவ்வொரு நபரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் உட்பட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கோடிட்டுக் காட்டும் கூட்டு வங்கிக் கணக்கு ஒப்பந்தத்தை தம்பதிகள் வைத்திருக்க வேண்டும்.
2) உயில்
இந்த சட்ட ஆவணம் ஏதேனும் ஒருவருக்கு இடர் ஏற்பட்டால், சொத்து மற்றும் நிதி உட்பட உங்கள் சொத்துக்கள் எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பதைக் குறிப்பிடுகிறது.
இதன்மூலம், இரு கூட்டாளிகளும் தங்கள் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதையும், தங்கள் அன்புக்குரியவர்கள் பராமரிக்கப்படுவதையும் உறுதிசெய்ய முடியும்.
3) திருமணச் சான்று
தம்பதிகளுக்கு திருமணச் சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணம். இது உங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.
கூட்டுக் கடன்களைப் பெறுதல், காப்பீட்டு திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கூட்டுக் கணக்குகளைத் தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு இது அவசியம்.
4) காப்பீடு திட்டங்கள் தொடங்குதல்
இன்றைய நிச்சயமற்ற உலகில், ஆயுள் காப்பீடு என்பது தம்பதிகளுக்கான நிதித் திட்டமிடலின் முக்கிய அம்சமாகும். தனியான அல்லது கூட்டு ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளை வைத்திருப்பது, இடர்கள் ஏற்படும் சமயத்தில் உதவும்.
5) சொத்து ஆவணங்கள்
சொத்து தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஒழுங்காக வைத்திருப்பது அவசியம். இதில் கொள்முதல் ஒப்பந்தங்கள், உரிமைப் பத்திரங்கள், கடன் ஆவணங்கள் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் ஆகியவை அடங்கும்.
6) வருமான வரிச சான்றுகள்
இந்த ஆவணங்கள் வருமான வரிக் கணக்குகளைத் துல்லியமாகத் தாக்கல் செய்வதற்கும் வரிச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் உதவுகின்றன.
மேலும், நிதி ஆரோக்கியத்தைப் பற்றிய தெளிவை வழங்குகின்றன. இது, நிதி திட்டமிடல் மற்றும் கடன்களைப் பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“