இந்தியப் பங்குச் சந்தை 7 மாதங்களுக்கும் குறைவான காலக்கட்டத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 70,000 முதல் 80,000 வரை உயர்ந்தது. இதேநிலை தொடர்ந்தால், சென்செக்ஸ் 2025 டிசம்பரில் விரைவில் 1 லட்சம் என்ற மைல்கல்லை எட்ட முடியும்.
ஏப்ரல் 1979 இல் சென்செக்ஸின் அடிப்படை மதிப்பை 100 ஆகக் கருத்தில் கொண்டால் 15.9 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ந்து 45 ஆண்டுகளில் 800 மடங்கு உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ் ஆண்டுக்கு இதே வேகத்தில் 15.9 சதவீத வளர்ச்சியை தொடர்ந்தால், அடுத்த ஆண்டு டிசம்பரில் 1 லட்சத்தை எட்டலாம். சென்செக்ஸ் 20 வர்த்தக அமர்வுகளில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது, இது அதன் வரலாற்றில் மிக விரைவான வளர்ச்சியாகும்.
இந்த விரைவான வளர்ச்சியானது, மேக்ரோ எகனாமிக் அடிப்படைகள், அமெரிக்க பெடரல் வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான அரசாங்கக் கொள்கைகளால் உந்தப்பட்டுள்ளது. அதாவது, 7 மாதங்களுக்கும் குறைவான அல்லது 139 அமர்வுகளில் மிக வேகமாக 10,00 புள்ளிகளை எட்டியது.
இது குறித்து, பங்கு தரகர்களின் தொழில்நுட்ப ஆராய்ச்சி ஆய்வாளர் ஜிகர் எஸ் படேல் சென்செக்ஸின் வரலாற்று கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தின் (சிஏஜிஆர்) அடிப்படையில், இது தோராயமாக 14-16 சதவீதம் ஆகும்.
சென்செக்ஸ் 1.5 முதல் 2 வருட காலக்கெடுவுக்குள் 100,000 புள்ளிகளை எட்டக்கூடும். இருப்பினும், 2024 ஒரு லீப் ஆண்டு என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம், மேலும் வரலாற்று ரீதியாக, லீப் ஆண்டுகள் பெரும்பாலும் சந்தை திருத்தங்களுடன் ஒத்துப்போகின்றன.
“இந்த ஆண்டு, தேர்தல் முடிவுகள் காரணமாக இந்திய சந்தை ஏற்கனவே பாரிய ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. கூடுதலாக, வரவிருக்கும் பட்ஜெட் அறிவிப்பின் காரணமாக சாத்தியமான ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம், இது ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கும் அல்லது 2024 பட்ஜெட்டுக்கு முன் ஒரு சிறிய திருத்தம் கூட ஏற்படலாம்” என்றார்.
இன்று, இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் பிஎஸ்இ சென்செக்ஸ் 461 புள்ளிகள் சரிந்து 79,587 புள்ளிகளிலும், நிஃப்டி 50 குறியீடு 0.27 சதவீதம் சரிந்து 24,236 ஆகவும் இருந்தது. பிஎஸ்இ சென்செக்ஸில் ஹெச்டிஎஃப்சி வங்கி நஷ்டத்தில் முன்னணியில் இருந்தது, அதைத் தொடர்ந்து எம்&எம், டைட்டன், டாடா ஸ்டீல், பவர்கிரிட் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.
மறுபும், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் சன் பார்மா ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.