மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்கள் பணத்தை மிட்-கேப் நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (AMFI) படி, மிட் கேப் நிறுவனங்கள் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 101 முதல் 250 வது இடத்தில் உள்ளன.
மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் குறைந்தபட்சம் 65 சதவீத முதலீட்டை மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று மியூச்சுவல் ஃபண்டுகளின் ஏஎம்எஃப்ஐ வகைப்பாடு விதி கூறுகிறது.
மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பெரிய கேப் மியூச்சுவல் ஃபண்டுகளை விட சிறந்த வருவாயை வழங்கலாம். இருப்பினும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளை விட நிலையானதாகக் கருதப்படுகின்றன. தற்போது, வருடாந்திர SIP வருமானம் (XIRR) அடிப்படையில் டாப் 7 மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்திறனை பார்க்கலாம்.
குவாண்ட் மிட் கேப் ஃபண்டு
குவாண்ட் மிட் கேப் ஃபண்டு, கடந்த 5 ஆண்டு காலத்தில் 43.50 வருடாந்திர SIP வருமானத்தை அளித்துள்ளது. 5 ஆண்டுகளில் ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி அல்லது மொத்தம் ரூ.6 லட்சத்தை ஃபண்டில் முதலீடு செய்து மொத்தம் ரூ.17,13,818 வருவாய் பெற்றுள்ளனர்.
மோதிலால் ஓஸ்வால் மிட் கேப் ஃபண்டு
மோதிலால் ஓஸ்வால் மிட் கேப் ஃபண்டு 5 வருட காலத்தில் 40.79% எஸ்.ஐ.பி வருமானத்தை அளித்துள்ளது. இதில, ரூ.10,000 மாதாந்திர எஸ்ஐபி மொத்தம் ரூ.16,11,099 கொடுத்துள்ளது.
எடெல்வெஸிஸ் மிட் கேப் ஃபண்டு
எடெல்வெஸிஸ் மிட் கேப் ஃபண்டு 5 ஆண்டுகளில் 36.60% வருடாந்திர எஸ்.ஐ.பி வருமானத்தை அளித்துள்ளது. ஃபண்டில் ரூ.10,000 எஸ்ஐபி 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.14,64,889 கொடுத்துள்ளது.
மகிந்திரா மேனுஃலைப் மிட் கேப் ஃபண்டு
மகிந்திரா மேனுஃலைப் மிட் கேப் ஃபண்டு 5 ஆண்டுகளில் 36.6% SIP வருமானத்தை அளித்துள்ளது. ஃபண்டில் ரூ.10,000 மாதாந்திர எஸ்.ஐ.பி 5 வருட காலக்கெடுவில் ரூ.14,63,157 ஆக மாறியுள்ளது.
நிப்பான் இந்தியா க்ரோத் ஃபண்டு
நிப்பான் இந்தியா க்ரோத் ஃபண்டு 5 வருட காலத்தில் 36.28% ஆண்டு SIP வருமானத்தை அளித்துள்ளது. நிதியில் ரூ.10,000 மாதாந்திர எஸ்.ஐ.பி மொத்தம் ரூ.14,52,100 கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“