இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமான முதலீட்டு விருப்பமாக ஃபிக்ஸட் டெபாசிட்ட்கள் திகழ்கின்றன. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் மீது கடன் பெறுவதும் அதிகரித்து வருகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டு மீது கடன் வாங்கும் முன்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை பார்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்து, வருமானம் நிலையானதாக இருக்கும் பட்சத்தில் வங்கியில் நீங்கள் கடன் பெறுவதற்கு நிறைய வழிகள் உள்ளன.
எனினும், முன்னறிவிப்பின்றி ஏற்படும் சில அவசர சூழ்நிலைகள் நிதிநிலையை முடக்கி விடுகின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்கிருந்து கடன் பெறுவது என்று தெரியாமல் பலர் குழப்பத்தில் தள்ளப்படுகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் அவசர காலத்தில் நிதியுதவி பெறுவது மிகவும் எளிதாகி விட்டது. அத்தகைய ஒரு முறையைப் பற்றி பார்ப்போம்.
எஃப்டி மீதான கடன் என்றால் என்ன?
ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு எதிரான கடன் ஒரு வகையான பாதுகாப்பான கடனாகும், இதில் எஃப்டி வைத்திருப்பவர் தங்களுடைய நிலையான வைப்பு தொகைக்கு எதிராக கடனைப் பெறலாம்.
இன்றைய காலகட்டத்தில் எஃப்டிகளை வழங்கும் பெரும்பாலான வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் இந்த வகையான கடன் எளிதாகக் கிடைக்கிறது மற்றும் இது கடன் பெறுவதற்கான பிரபலமான முறையாக மாறியுள்ளது.
வட்டி விகிதம்
பொதுவாக வட்டி விகிதங்கள் கடன் வாங்கும் திறனை பெரிதும் பாதிக்கிறது. வழக்கமான நடைமுறையை விட FD களுக்கு எதிராக கடன் வழங்குபவர்கள் வட்டி விகிதத்தை 0.75% முதல் 2% வரை வட்டி விகிதத்தை வசூலிக்கின்றனர்.
ஏனென்றால், FD பிணையமாக செயல்படுகிறது, இது கடனளிப்பவரின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும் இது, குறைந்த வட்டி விகிதத்தை வழங்கவும் வாய்ப்பளிக்கிறது.
கடன்தொகை
இந்த வகை திட்டத்தின் கீழ் கடன் பெறுபவர்களுக்கு, கடன் தொகை வைப்புத் தொகையின் 85% மற்றும் அதற்கு மேல் இருந்து தொடங்குகிறது.
சில கடனளிப்பவர்கள் வைப்பு வசதிக்கு எதிராக கடனை வழங்க குறைந்தபட்ச வைப்புத் தேவையைக் கொண்டிருக்கலாம்.
கடன் செயலாக்கம் மற்றும் ஆவணங்கள்
நிலையான வைப்புகளைப் போலவே, FDக்கு எதிரான கடன்களும் விரைவான செயலாக்கம் மற்றும் ஒப்புதல் நேரத்துடன் வருகின்றன.
ஏனென்றால், கடன் பெறப்பட்ட FD, பிணையமாகச் செயல்படுவதால், கடன் வாங்குபவரின் நிதி வரலாற்றை பற்றிய விரிவான சரிபார்ப்புக்கான தேவையை குறைக்கிறது.
இதனால், குறைந்தபட்ட ஆவணங்களுடனேயே கடனை பெற முடிகிறது.
இணை மற்றும் உத்தரவாதம்
FD க்கு எதிரான கடனின் விஷயத்தில், கடன் வாங்கியவர் பிணையமாக செயல்படும் FD இன் உரிமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்.
இந்த முறையில் கடன் பாதுகாக்கப்பட்டிருப்பதால், கூடுதல் உத்தரவாதத்திற்கான தேவையில்லை. இதனால், இதை பெறுவதற்கான வழிமுறை எளிதாக உள்ளது.
கடனுக்கான நிலுவையில் உள்ள வட்டியை செலுத்த கடன் வாங்குபவர் பயன்படுத்தக்கூடிய முன் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் கடனின் காலப்பகுதியில் FD தொடர்ந்து வட்டியைப் பெறுகிறது.
திருப்பிச் செலுத்தும் காலம்
FDக்கு எதிரான கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் முறைகள் ஏற்றாற்போல் வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டவை. மேலும் இவற்றை ஒரு குறிப்பிட்ட மாதாந்திர தொகையாகவும் செலுத்தலாம்.
ஆனால், FD முதிர்ச்சியடைவதற்கு முன்பே இத்தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும். இதனால், கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நிலையானதாகவே உள்ளது. மேலும், இது கடன் வாங்குபவர் தனது நிதிகளைத் திட்டமிட உதவுகிறது.
மேலும், பல கடன் வழங்குபவர்கள் இந்த வகை கடனில் முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களை விதிக்க மாட்டார்கள், இது பொதுவாக மற்ற வகை கடன்களில் விதிக்கப்படும்.
தகுதி
இந்த வகையில் கடன் பெற வங்கி அல்லது பிற நிதி நிறுவனங்களில் எஃப்டி கண்க்கு வைத்திருக்க வேண்டும்.
உங்கள் எஃப்டிக்கு எதிராக நீங்கள் கடன் வாங்கும் போது புத்திசாலித்தனமான முடிவை எடுக்க இந்த குறிப்புகள் உதவும் என்று நம்புகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.