அஞ்சலக திட்டங்கள் மக்கள் எளிதில் அணுகும் வகையில் உள்ளன. இந்தத் திட்டங்களில் வருடம் குறைந்தப்பட் இருப்புத் தொகையை முதலீடாக செலுத்துவது அவசியமாகும்.
அந்த வகையில், பி.பி.எஃப், சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு குறைந்தப்பட்ச இருப்புத் தொகை செலுத்த மார்ச் 31ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்தத் தினத்துக்குள் குறைந்தப்பட்ச தொகையை செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் விதிக்கப்படும். சில கணக்குகள் நீண்ட நாள்களாக செயல்படாமல் இருந்தால் அந்தக் கணக்குகள் முடக்கப்படும்.
உதாரணமாக பி.பி.எஃப் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.500 முதலீடு கட்டாயம். இந்த முதலீடு தவறும்பட்சத்தில் ஒரு சிறிய தொகை அபராதமாக விதிக்கப்படும்.
பல ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் கணக்குகள் முடக்கப்படும். மேலும், சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் இதேபோன்று குறைந்தப்பட் தொகை கணக்கீடு உண்டு.
இந்தத் தொகையை செலுத்துவதில் சிக்கல் ஏற்படும்போது, அபராதம் விதிக்கப்படும். சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை ரூ.250 செலுத்தி பெண் குழந்தைகள் பெயரில் சேமிப்பை தொடங்கலாம்.
இதேபோல், தேசிய பென்ஷன் திட்டத்தை ரூ.1000 செலுத்தி தொடங்கலாம். மேற்கூறிய இந்தத் திட்டங்களில் ரூ.1,50,000 வரை 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“